கருஞ்சீரகம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துமா?

கொலஞ்சி எனப்படும் கருஞ்சீரகம் சர்வரோக நிவாரணி என்றால் மிகையாகாது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக மருத்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முகமதியர்களின் புனித நூலான குர்ஆன்னில் கருஞ்சீரகத்தை பற்றி குறிப்புகள் உள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் இருந்து பரவலாக மருந்தாக பயன்படுகிறது. மரணத்தை தவிர மீதி அனைத்திற்கும் தீர்வு தரும் கருஞ்சீரகம். 630 அறிவியல் ஆய்வுகள் கருஞ்சீரகம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்று உறுதி செய்துள்ளது.

கருஞ்சீரகத்தை தொடர்ந்து எடுத்து வரும் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொலஸ்டிரால் அளவும் குறைகிறது. புற்றுநோய் வருவதை தடுக்கிறது மேலும் கீமோதெரபி எடுத்தவர்களுக்கு வரும் சோர்வு நீங்கி விரைவில் புத்துயிர் பெறுகிறார்கள். சர்க்கரை நோயாளிகள் கருஞ்சீரகத்தை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

  • கருஞ்சீரகம், வெந்தயம் இரண்டையும் லேசாக வறுத்து பொடி செய்து அதனை கொதிக்கும் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகலாம்.
  • கருஞ்சீரகம், சோம்பு, ஓமம் மூன்றும் சம அளவில் எடுத்து கொள்ளவும். இதனை கொதிக்க வைத்து டீ போல வெல்லம் சேர்த்து பருகலாம்.
  • கருஞ்சீரகத்தை தொடர்ந்து ஒரு டீஸ்பூன் அளவு தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் மூன்று முதல் பனிரெண்டு வாரங்களில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. நரம்புகள் வலுப்பெறும் மேலும் மூட்டுகளில் உள்ள வலிகள் குறையும். பக்கவிளைவுகள் இல்லாத கருஞ்சீரகத்தை உணவுகள் தாளிக்க கூட பயன்படுத்தலாம். Miracle herb  என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கருஞ்சீரகத்தை இயன்றவரை ஏதோவொரு வகையில் உட்கொள்ளும் போது நோயற்ற வாழ்வு உறுதியாகும்.

While using black seeds in small amounts in cooking can be a tasty of way of incorporating the seeds in your diet, large-scale clinical trials are needed before the oil can be recommended as a treatment for any condition. If you’re still thinking of using black seed oil for health purposes,be sure to speak with your healthcare provider first to weigh the pros and cons and discuss whether it’s right for you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.