லோ-கலோரி ஜீஸ் வெயிட் குறைக்க உதவுமா?

அனைத்து வியாதிகளுக்கும் ஆரம்ப புள்ளி அதிக எடை தான். அதிக எடை என்பது ஒரு நாளில் கூடியதில்லை. மெல்ல மெல்ல எடை கூடி ஒரு நாள் நாம் சுதாரித்து பார்க்கும் போது கன்னாபின்னாவென்று எடை அதிகரித்து இருக்கும். எக்ஸ்ட்ரா எடையை குறைக்க யார் என்ன சொன்னாலும் செய்து பார்த்தும் எடை மட்டும் குறைந்தபாடில்லை என்று அலுத்து கொள்பவர்கள் உண்டு. 

உடல் எடை குறைப்பு என்பது தவம் இருப்பது போல, உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி அல்லது யோகா, சீரான தூக்கம் என ஒருங்கிணைந்த ஒரு திட்டமிட்ட முயற்சியில் தான் உடல் எடை குறையும்.

உணவினை தேர்ந்தெடுத்தல்

நிறைய காய்கறிகள், பழங்கள் நிறைந்த உணவுத் திட்டம் கடைப்பிடிப்பவர்கள் தினமும் ஒரே மாதிரியாக சாப்பிடுபவர்கள் அலுத்து கொள்வது உண்டு. பழச்சாறுகள் அருந்துவது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று ஆனால் பழச்சாறுகள் எடையைக் கூட்டும். பழச்சாறு அல்லது காய்கறி சாறு எதுவென்றாலும் நாம் தேர்ந்தெடுக்கும் காய்கறிகள் அல்லது பழங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. குறைந்த கலோரி அளவு உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை தேர்வு செய்து பருகுவது நல்ல பலன் தரும்.உதாரணமாக,.. சில ரெசிபிகளை பார்ப்போம்.

தக்காளி சாறு

100கிராம் தக்காளியில் 18 கலோரி மதிப்பு மற்றும் 3.86 கிராம் கார்போஹைட்ரேட் நிறைந்தது. தக்காளியில் நீர் சத்து அதிகம் என்பதால் இது ஒரு சிறந்த தேர்வு. இரண்டு கப் நறுக்கிய தக்காளித்துண்டுகள், அரை கப் பீட்ரூட், எலுமிச்சை சாறு எல்லாம் கலந்து சாறு எடுத்து அதனுடன் உப்பு சேர்த்து பருகலாம்.

கேரட் ஜீஸ்

100கிராம் கேரட்டில் 41கலோரி அளவு மற்றும் 3 கிராம் நார்ச்சத்து அதிகம் உள்ளது . இதுவும் சிறந்த தேர்வு தான்.

காய்கறிகளை பற்றிய அறிவும் அதனைக் கொண்டு தெரிவு செய்து ஆரோக்கியம் பேணுவோம்.


Carrot juice is also known increase bile secretion which helps in burning fat thus aiding weight loss. Add an apple, half an orange and some ginger to make a wonderful detox drink that will flush out all the toxins. In one study, adults who drank 16 ounces of low-sodium vegetable juice while following a low-calorie diet lost significantly more weight than those who did not. However, consuming a low-calorie vegetable juice can increase your vegetable intake and may even help you lose weight.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.