தோட்டக்கலையில் சக்கை போடு போடும் தென்னை நார் (COCO PEAT)

இந்தியா போன்ற விவசாய நாடுகளில் தோட்டக்கலை என்பது தொழிலாகவும், இனிமையான பொழுது போக்காகவும் இருக்கிறது. பசுமை புரட்சிக்கு பின் அளவிலா அளவிற்கு விவசாயத்தில் புதுமைகளும், அது தரும் நன்மைகளும் என விவசாயம் வீறுநடை போடுகிறது.

மழை பொய்த்தல், வெள்ளம், வறட்சி போன்ற சிக்கல்களையும் மீறி விவசாயம் நடக்கிறது.

செயற்கை உரங்களும், பூச்சி மருந்துகளும் மண்ணை மலடாக்குவதால் மக்கள் இதற்கு மாற்றாக நம் முன்னோர்கள் காட்டிய வழியில் இயற்கை விவசாய முறையில் களம் இறங்கி உள்ளனர்.

நீர்வளம், தரமான விதை இருந்தாலும், செடிக்கு ஆதாரமான மண்வளம் தான். அனைத்து சத்துக்களும் உள்ளடங்கிய செழிப்பான மண் தான் விதையை உள்வாங்கி, தன்னிடம் உள்ள சத்துக்களை அளித்து முளைக்க வைத்து, அது வளர்ந்து பலன் தந்து மடியும் வரை, தாய் தன் குழந்தையை பேணுவது போல் தான் மண்ணின் இயல்பும்.

மண் வளத்தை கூட்ட, இயற்கை, செயற்கை உரங்கள் சேர்ப்பர். Growing medium எனப்படும் பலவித மீடியாக்கள் விவசாய உலகில் பயன் பட்டாலும், மலிவும், எளிதாக கிடைக்கும் தென்னை நார் கழிவு தான் சிறு, பெரு விவசாயிகளின் தேர்வாக உள்ளது.

நிறைய தென்னை மரங்களைக் கொண்ட இலங்கையில், தேங்காய் நார் கழிவு பெரும் பிரச்சினை தந்த போது, 1983-ல் Nature Bounty Pvt. எனும் நிறுவனத்தின் ஆராய்ச்சி தந்த பலனே கோகோ பீட்.

தேங்காயின் வெளிப்புறத்தில் உள்ள கடினமான தேங்காய் நார்களை கழுவி, உலரவைத்து சிறு சிறு ப்ளாக்குகளாக தயாரிக்கின்றனர். தென்னை விவசாயிகள், கயிறு உற்பத்தியாளர்களுக்கு உபரியாக வருமானம் கொழிக்கும் தொழில் இது.

தென்னை நார் கழிவு நீரை உறிஞ்சி வைத்து கொள்ளும் எனவே தினசரி நீர் பாய்ச்ச வேண்டாம்.

காற்றோட்டம் உள்ளதால் விதை முளைப்புத் திறனை அதிகரிக்கும்.

நீர் வடிவதால் அளவான ஈரப்பதம் அதனால் களை, பூச்சிகள் மற்றும் வேரினை நோய்கள் தாக்குவதில்லை.

கோகோ பீட் கலந்த கலவை கையாளுவது எளிது. மண் இறுகுவதில்லை.

செடிகள் வளர தேவையான 5.2லிருந்து 6 .8 வரை தான் இதன் pH.

துர்வாடை இல்லாத, இயற்கையானது. இது தாவரங்களுக்கு வாழ்நாளைக் கூட்டுகிறது.

வீட்டு தோட்டங்கள், தோட்டத்து பண்ணைகள், பசுமை குடில்கள், ஆராய்ச்சி நிலையங்களில் பயன் படுகிறது. மக்களின் பயன்பாடு அதிகரிக்க வேண்டும். ஏனெனில் கோகோ பிட் என்பது விவசாய பொருள் கழிவு மேலாண்மையின் கீழ் வரும் பயனுள்ள சந்தை மதிப்பு மிக்க தயாரிப்பு.


Coco peat called as coir or coir dust. Coconut coir is made out of the fibrous stuff over the coconut shell. It is very useful for organic gardening at home, green or organic farming etc. It helps to retain water content in the soil hence it cancels the need for watering plants everyday.It promotes strong root growth and prevents fungal attacks in plants.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.