சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் தயிரை பயன்படுத்தலாமா?

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் விட்டமின்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மட்டும் அல்லாமல் சரும பொலிவுக்கு பெரிதும் உதவுகிறது. தயிரை எப்படி எல்லாம் அழகை மேம்படுத்த உதவுகிறது என்று பார்ப்போம்.

கூந்தல் வளர்ச்சிக்கு தயிர்

  • உங்கள் கூந்தல் வறட்சியை போக்க வாரத்திற்கு இரண்டு முறை தயிரை தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால் கூந்தல் வறண்டு போவது  குறையும்.
  • எலுமிச்சை சாற்றுடன் தயிர் கலந்து தலைமுடிக்கு தடவினால் கூந்தல் மென்மையாகவும், அதேசமயம் பொடுகு தொல்லையும் மாறும். 
  • தயிர் உடன் கடலைமாவு சேர்த்து கலந்து அதனை தலையில் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து சிகைக்காய் போட்டு தலைமுடியை அலசவும். பட்டுப்போன்ற கூந்தலுக்கு உத்தரவாதம்.
  • தயிர், ஹென்னா, முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து கூந்தலின் வேர்க்கால்களில் படும் படி பூசி ஊறியதும் மென்மையான ஷாம்பு போட்டு குளிக்கவும்.
  • தயிர் உடன் உலர்ந்த நெல்லிக்காய் பொடி கலந்து கூந்தலின் வேர்க்கால்களில் படும்படி தடவவும். இதில் உள்ள விட்டமின் பி5 கூந்தல் உதிர்வதை தடுத்து அடர்த்தியாக வளரச்செய்கிறது.

சரும பராமரிப்பில் தயிர்

  • தயிரில் உள்ள விட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து அனைத்தும் சருமத்திற்கு பொலிவு தருகிறது. எண்ணெய் சரூமத்தினர் மட்டும் தயிரை பயன்படுத்தாமல் இருந்தல் நல்லது.
  • தயிரை முகம் மற்றும் உடம்பில் தடவி வந்தால் வெயிலினால் ஏற்பட்ட சருமக் கறுப்பு நீங்கும். 
  • டீன் ஏஜ் வயதினருக்கு ஏற்படும் முகப் பருவை சரி செய்ய தயிர்உடன் கடலை மாவு சேர்த்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் முகப் பரு மறையும்.
  • தயிரும் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் தடவி வரவும். சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி விடும்.
  • தயிரில் ஆரஞ்சு தோல் பவுடரை கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொலிவு பெறும்.

Curd also be used for hair dandruff problems. Curd and lemon is one of the best remedy for eggs and lice in hair. Sour curd also be used for hair. Curd and egg goes well for hair fall problems.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.