பூப்பெய்திய பெண் குழந்தைகள் இவற்றை எல்லாம் சாப்பிடலாமா?

பெண் குழந்தைகள் பூப்பெய்தும்போது அவர்கள் உணவு விஷயத்திலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைத்து சரிவிகித உணவாக தேர்வு செய்து உண்ணவேண்டும். அவற்றுள் சில.

கறுப்பு உளுந்து 

களி தயாரிப்பதற்குக் கறுப்பு உளுந்தை நன்றாக வறுத்துப் பொடித்து பின் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். அதே மாவைக் கூழ் போன்று காய்ச்சி, நல்லெண்ணெய், காய்ந்த திராட்சை, முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். எலும்புகள் வலுவாகவும் மற்றும் சீரான மாதவிடாய் சுழற்சிக்கு உதவும் ஈஸ்ட்ரோஜன் (Estrogen), புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) ஆகிய ஹார்மோன்கள் இயங்கவும் கறுப்பு உளுந்து உதவும். 

நல்லெண்ணெய்

ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய ஹார்மோன்கள் செயல்பாட்டிற்கு நல்ல கொழுப்பு மிகவும் அவசியம். நல்லெண்ணெய்யில் இருந்து கிடைக்கும் கொழுப்பு உடலுக்கு நல்லது.

நாட்டு முட்டை  

பெண் குழந்தைகள் பூப்பெய்திய உடன் உடலுக்குத் தேவையான புரதம், கொழுப்புச்சத்தை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டு முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும். பச்சை முட்டையை தவிர்க்க வேண்டும்.

அசைவ உணவுகள்

மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். 

கீரை வகைகள்

ரத்தச்சோகை  வராமல் இருக்க முருங்கைக் கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கி கீரை இவற்றில் ஏதேனும் ஒரு கீரையை வாரத்திற்கு 3 முறையாவது எடுத்துக் கொள்ள வேண்டும். 

பாகற்காய், சுண்டைக்காய் 

சில பெண் குழந்தைகளுக்கு உடலில் ரத்த அளவு குறைவால் மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும். இதற்கு வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சியும் காரணமாக இருக்கலாம். 

உணவில் பாகற்காய், சுண்டைக்காய் ஆகிய இரண்டையும் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் நாக்குப்பூச்சி தொந்தரவு ஏற்படாது. இந்த பூச்சிகளால் இரத்த சோகை ஏற்படும் என்பதால் மருத்துவரை அணுகி பூச்சி மாத்திரைகள் உண்ணலாம்.

சத்துமாவு உருண்டை 

கேழ்வரகு, கம்பு, நாட்டுச் சோளம், பொட்டுக்கடலை மற்றும் பயத்தம் பருப்பு என நவதானியங்களால் தயாரிக்கப்படும் சத்து மாவு உருண்டையை தினமும்  சாப்பிட கொடுக்க வேண்டும். மாதவிடாய் நாள்களில் சாப்பிட்டால் அதிக அளவு பலன் பெறலாம். 

கொண்டைக்கடலை

கருப்பு கொண்டைக் கடலையை வேகவைத்தோ அல்லது முளைக்க வைத்தோ வாரத்திற்கு 2 முறை சேர்த்துக் கொண்டால் கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. 

சில பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்திய அடுத்த 4 அல்லது 5 மாதங்களுக்கு மாதவிடாய் வராமல் இருக்கும். சத்தான உணவுகளைக் கொடுக்கும்போது மாதவிடாய் சீராகும். 


Girls during puberty must eat nutritious food because it is essential for a lifetime good health. Puberty is nothing but the time when the body is getting ready for sexual reproduction. At this time nutrients are very essential because of the hormonal changes in one’s body. Girls undergo puberty during 10-15 age group. Nutritious food is important to overcome eating disorders during this stage. Girls during puberty lack calcium. To avoid calcium related problems like osteoporosis later in their life, calcium rich food must be consumed. Food like low fat curd or milk, low fat cheese can be consumed to avoid calcium deficiency. Yogurt is also a good source of calcium. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.