மகிழ்ச்சியாக இருப்பது நம் கையில் தான் இருக்கிறது !!!

எத்தனை கோடி பணம் இருந்தாலும் நீ மகிழ்ச்சியாக இருக்குறீயா என்றால் எல்லோரும் இல்லை என்றே கூறுவார்கள். ஒவ்வொருவருக்கும் ஆசைகளும் தேடல்களும் வேறுபடும்.மற்றவர்களின் உணர்ச்சிக்கு நாம் பாதிக்காதவாறு மனதை தயார் செய்தால் போதும், மகிழ்ச்சி வசப்படும்.

எல்லைகளை நிர்ணயி

எல்லோரையும் திருப்தி படுத்த வேண்டும் என்றால் ஒரு நாளும் நமக்கு நிம்மதியளிக்காது. நமக்கான பாதையில் யாரையும் நோகடிக்காமல் முன்னேறி சென்று கொண்டிருக்கவேண்டும். என்னால் முடியும் என்று ஏகப்பட்ட பொறுப்புகளை தலையில் சுமக்காதீர்கள். கிடைக்கும் நேரத்தை இறைவனை பிரார்த்திக்கவும், தியானம் செய்யவும், சுயப் பரிசோதனை செய்யவும் பயன் படுத்துங்கள்.

தினமும் தியானம் பழகுங்கள்

தியானம் மன அமைதியைக் கொடுப்பதுடன், பலவிதமான மன உளைச்சல்களிலிருந்தும் நம்மை காக்கிறது. அரை மணி நேரத் தியானம் மீதி இருக்கும் 23 ½ மணி நேரத்திற்கு நம்மை அமைதிப் படுத்தும். ஆரம்பகாலத்தில் மனம் கட்டுப்படுவது சிரமமாக இருந்தாலும் நாளடைவில் மனம் அமைதியடைவதை உணர்வீர்கள்.

மனதை ஆக்க பூர்வமான வழியில் செலுத்துங்கள்

மனம் எனும் குரங்கு வேலையில்லாத பொழுது தான் கண்டதையும் நினைக்கும். எனவே மனதிற்கு வேலை கொடுங்கள். உங்களுக்குப் பிடித்த ஒரு பொழுதுபோக்கை தொடர்ந்து செய்து வாருங்கள். பிறருக்கு உதவுதல், சமூக பணி என்று ஏதாவது செய்து கொண்டே இருங்கள், இவையெல்லாம் உங்கள் மனதிற்கு நன்மையளிப்பவை.

சோம்பித் திரியாதீர்கள்

காலம் பொன் போன்றது ஆகவே அந்தந்த வேலையை உடனுக்குடன் செய்து முடியுங்கள். காலத்தே பயிர் செய்பவனுக்கு தான் விளைச்சல் பலன் கிடைக்கும்.

தோல்வியை கண்டு துவளாதீர்கள் 

தோல்வி வந்தால் மனம் தளர வேண்டாம். செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். முடிந்த கடந்த காலத்தை எவராலும் மாற்றி அமைக்க இயலாது. ஆனால் எதிர்காலம் நம் கையில் என்பதனை நம்பிக்கையுடன் எதிர்நோக்குங்கள்.


Happiness is just your state of mind. You can find innumerable things in life that can make you happy. Stay away from the people who have negative influences in your life. However, inevitable they may be, you just need to distanced yourself from them as much as possible. Cynics are found everywhere. You should try to cut their company. Stress is ruining your life and health. If you are stressed or worked out, you cannot be happy. Try to put off the stress and make yourself happy. Meditating is the best way to manage stress. Forget about everything else in the world close your eyes for 15-20 minutes and meditate before you go to bed. This will help you sleep better.  Give the happiness to others and it will come back to you as well. Donating and making others smile is a great way to feel good. Smile and it will radiate a positive energy around you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.