விடுமுறையில் பிஸ்கட் லட்டு செய்து கொடுத்து குழந்தைகளை அசத்துவோம்!

குழந்தைகள் விரும்பும் பிஸ்கட் கொண்டு கேக், புட்டிங் வரிசையில் லட்டு செய்து பார்க்கலாம். சிலநேரங்களில் நமத்து போன பிஸ்கட்கள் மீந்து இருந்தால் அதனை வீணாக்காமல், ஸ்வீட்டாக மாற்றலாம் என்பது ஒரு ப்ளஸ் பாயிண்ட்.

தேவையான பொருட்கள்

 • மேரி பிஸ்கட் – 1 பாக்கெட் 
 • கன்டென்ஸ்ட் மில்க் – 1/2 கப் 
 • கோக்கோ பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
 • பால் – 2 டேபிள் ஸ்பூன்

அழகுப்படுத்துவதற்காக

தேங்காய் பவுடர் – 4 டேபிள் ஸ்பூன்

செயல்முறை

 • பிஸ்கட்டை மிக்ஸியில் போட்டு நன்றாக தூளாக்கிக் கொள்ளவும்.
 • ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் 2 முதல் 3 கரண்டி கன்டெஸ்ட் மில்கை சேர்க்கவும். 
 • அதனுடன் கோக்கோ தூள் சேர்த்து நன்கு கலக்கவும். 
 • கோக்கோ கலவையுடன் பிஸ்கட் தூளைச் சேர்க்கவும். 
 • கலவையுடன் நீங்கள் தனியே எடுத்து வைத்துள்ள உலர் பழங்களைச் சேர்க்கவும். 
 • ருசி பிடிக்கும் என்றால் கலவையுடன் மேலும் கன்டென்ஸ்ட் பால், மற்றும் கோகோ பவுடரைச் சேர்க்கலாம்.
 • லட்டுவிற்கு மேலும் அதிகமான ருசியும், வழவழப்பையும் தரும். 
 • கலவையானது திக்கான உருண்டை பிடிக்கும் நிலைக்கு வர வேண்டும். ஆகவே தேவையெனில் சிறிது பிஸ்கட் தூளை சேர்த்து கொள்ளவும். அப்பொழுதுதான நீங்கள் லட்டுவை குறிப்பிட்ட வடிவில் பிடிக்க முடியும். 
 • சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் எடுத்து உங்களின் உள்ளங்கைகளில் தடவிக் கொண்டு கலவையை லட்டு வடிவத்தில் பிடிக்கவும்.
 • பிடித்த லட்டுவை துருவிய சாக்லேட்(optional) தேங்காய் பவுடர் (desicated coconut) பிரட்டவும் . 
 • லட்டுவை பிரிட்ஜில்  கால் மணி நேரம் வைத்து குளிர விடவும்.
 • தற்பொழுது சுவையான பிஸ்கட் லட்டு தயார்.

Chocolate Ladoo or laddu recipe is of Indian origin and gives traditional ladoos a modern twist, in our recipe we present an easy version of traditional ladoos to a simpleone for the busy housewives or working woman. Chocolate ladoo recipe is one of the simple, quick and easy recipe that everyone can made it in few minutes, and cooked without using  fire, So even kids can also made it. Marie biscuit chocolate logs are an easy to make, no-bake recipe with Marie biscuits that’s perfect for a kids’ party or gathering. Marie biscuit chocolate rolls is an easy Indian food recipe made with Marie biscuitscocoa, sugar powder, desiccated coconut and butter. Coconut laddu with a chocolate crust are easy to make and very delicious.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.