தேனை இதனுடன் கலந்து உண்டால் கோடி நன்மை!

இயற்கை அளித்த பெரும் கொடை தேன். இயற்கையாக உள்ள இனிப்பூட்டியான தேனின் சுவையை மனிதனால் செயற்கையாக உருவாக்க இயலவில்லை எனும் போதே தேனின் சிறப்பம்சம் புரியும். கோடிக்கணக்கான தேனீக்களின் கடும் உழைப்பு தந்த சுவையே தேன். என்சைம்கள் நிறைந்த தேன் மிகச்சிறந்த மருந்து. சுத்தமான தேனை பிறந்த குழந்தைக்கு கூட கொடுக்கலாம். தேனை தினசரி வாழ்வில் எப்படி எல்லாம் உபயோகிக்கலாம் என்று பார்ப்போம்.

 • உறக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடிக்கலாம்.
 • அனைத்து வகை பழச்சாறுடன் சர்க்கரைக்கு மாற்றாக தேன் கலந்து பருகலாம்.
 • மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து அருந்தினால் ரத்த விருத்திக்கும் அதேசமயம் வயிறு கோளாறுகள் நீங்கும்.
 • எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
 • நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும் என்பதோடு அல்லாமல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
 • ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து குடிக்கலாம்.
 • ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணிந்து விடும் மேலும் வயிற்றில் உள்ள புண்கள் ஆறும்.
 • தேங்காய்பாலில் தேன் கலந்து பருகும் போது குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறுவதோடு சளித்தொல்லை படிப்படியாக நீங்கும்.
 • இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும். செரிமானப்பிரச்சனைகள் தீரும்.
 • கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை நீங்கும் மேலும் புற்றுநோய்க்கான செல்களை அழிக்கும்.
 • தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும். தொண்டை வலியினால் குரல் கட்டியிருந்தால் இந்த கலவையை தொண்டையின் வெளிப்புறமாக தடவவும். சில மணி நேரங்களில் தொண்டை வலி, கமறல் நீங்கும்.
 • பலாப்பழத்தை தேனில் தொட்டு உண்பது சுவையை அதிகரிப்பதோடு மட்டும் அல்லாமல் பலாப்பழத்தின் செரிமானத்தை எளிதாக்குகிறது.

During the breakfast, it is also wise to cover bread with it or add some honey into milk. If you want to have some honey between meals, you should eat it about one hour before meal or two to three hours after meal. It is used for Healing Wounds. Honey has antibacterial, anti-fungal, and antioxidant properties, which is why honey is used for healing wounds.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.