Beetroot, panneer Vitamin c,Iron,calcium,magnesium, potassium போன்ற சத்துக்கள் நிறைவாக உள்ளன. இப்பொழுது இவை இரெண்டையும் சேர்த்து எளிய முறையில் உயிர்சத்து(Vitamin) நிறைந்த பீட்ரூட் சாலட் செய்வது எப்படி என்று பார்ப்போம் .

தேவையான பொருட்கள் :
- பீட்ரூட் – 300 gm
- பன்னீர் – 200 gm
- கோஸ் கேரட் – தலா 100 gm
- கெட்டி தயிர் – 3-5 tsb
- தேன் – 15-20 ml அல்லது சுவைக்கு ஏற்ப தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
- பீட்ரூட்டின் தோலை நன்கு சீவி சுத்தம் செய்து சிறு சிறு அளவில் நறுக்கி கொள்ள வேண்டும் . அதன் பின் அதை 5 நிமிடம் நன்கு வேகவைக்க வேண்டும்
- பன்னீரை எடுத்து அதே அளவுக்கு மிக மெல்லியதாக வெட்டி பீட்ரூட்டின்மேல் சமமாக அடுக்கவும். ஓர் அடுக்கு பீட்ரூட் எனில் அடுத்த அடுக்கு பன்னீர் என்ற வீதத்தில் இருக்க வேண்டும்.
- அதன்பிறகு, கேரட், கோஸ் போன்ற காய்கறிகளை நன்றாக சீவி அவற்றுடன் தேவையான அளவு கெட்டி தயிர் மற்றும் தேன் சேர்த்துக் நன்கு கலக்கி சாலட் மீது வைக்கவும்.

பலன்கள்: பீட்ரூட்டில் Vitamin C,Iron, Calcium, Magnesium மற்றும் Potassium போன்ற சத்துக்கள் அபரிவிதமாக உள்ளன.இரும்புச் சத்தை கிரகிக்கும் தன்மையை VITAMIN-C இயல்பாக கொண்டது . இந்த இரண்டு சத்துக்களும் இந்த சாலட்டில் முழுமையாக கிடைக்கின்றது.நீரில் கரையக்கூடிய தன்மை கொண்டது VITAMIN-C அதனால் அதை முடிந்த அளவு சமைக்காமல் அப்புடியே எடுத்துக்கொள்வது உடல் ஆரோகியதுக்கு மிகவும் நல்லது .இந்த சாலட் -ஐ தினம்தோறும் சாப்பிடுவது நமக்கு நன்மை தரும்.