செரிமான கோளாறுகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

உடல் உழைப்பு குறைவும், ஆரோக்கியத்திற்கு ஒவ்வாத உணவுகள்,  செரிமானத்தை பாதிக்கும் மருந்துகள், நோய்கள், மன அழுத்தம் என பல்வேறு காரணங்களால் செரிமானம் தடையுறும்.

செரிமான கோளாறுகள் எவை

உண்ட உணவு நான்கு மணி நேரத்தில் பசியெடுக்கும், உணவு உண்டதும் உடலுக்கு தேவையான சக்தியை அந்த உணவு தருகிறது , ஆகவே எண்சாண் உடம்புக்கு வயிறே பிரதானம் என்று கூறினாலும் மிகையாகாது.

ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை கழிவுகள் வெளியேறும்.  இந்த சுழற்சியில் ஏதாவது சிக்கல் அது உடலில் வெளிப்படுத்தும் அறிகுறிகள் மூலம் செரிமானத்தில் பிரச்சினை என்று தெரிந்து கொள்ளலாம்.

செரிமான கோளாறுக்கான அறிகுறிகள்

 • புளிச்ச ஏப்பம்
 • பசியின்மை
 • வாந்தி 
 • வயிற்றுவலி
 • வாயுத்தொல்லை

செரிமான கோளாறுகளை தவிர்ப்பது எப்படி

 • முதலில் உண்ணும் உணவை பசித்து உண்ண வேண்டும், நன்றாக மென்று கூழாக சாப்பிடவும்.  
 • உண்ணும் உணவை ரசித்து மெல்ல முழுவதும் வாயிலே  ஓ மென்று உண்ணும் போது தான் உமிழ்நீர் சுரக்கும்.‌ நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவும் உணவுக்கு முன் வெதுவெதுப்பான தண்ணீர் பருகுவது நல்லது.
 • நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உண்பது நல்லது ஏனெனில் மலக்குடலில் இருந்து கழிவுகள் வெளியேறும் போது தான் செரிமானம் சீராகும்.
 • இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் சேர்ந்த உணவுகளை அடிக்கடி உண்ண வேண்டும்.
 • வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வு ஏற்பட்டால் எலுமிச்சை சாறில் உப்பு கலந்து பருகலாம். உடனே வித்தியாசம் தெரியும்.
 • வாரம் ஒரு முறை விரதம் இருப்பது, தினமும் ஒரு முறை பச்சைக் காய்கறிகள் உண்பது, மாதம் ஒருமுறை இஞ்சிப்பால் என சில நெறிமுறைகள் ஏற்படுத்தி கொள்ளவும்.

செரிமான கோளாறுகள் தான் நோய்களுக்கான பிறப்பிடம் ஆகவே வயிற்றுக்கு கேடுதராத உணவுகளை உண்ணவும்.


Common causes for slow digestion and bloating is “Feeling sluggish and bloated can be the result of food choices — from too much alcohol, salt, sugar and high fat foods, to natural fermentable sugars in fruits, vegetables, dairy, legumes, grains and cereals,” Grosse said. Lactose intolerance, a condition in which you have digestive symptoms such as bloating, gas, or diarrhea after eating or drinking milk or milk products. dietary fructose intolerance, a condition in which you have digestive symptoms such as bloating, gas, or diarrhea after consuming foods that contain fructose.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.