உங்கள் யூடியூப் சேனலுக்கு அதிக SUBSCRIBERS கொண்டுவருவது எப்படி?

தற்போது அனைவரும் வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கவும், தொழிலை ஆன்லைனில் செய்யவும் அதற்கான வழியை தேடிக்கொண்டிருக்கிறோம். சரியாக கற்றுக்கொண்டு அதை செய்தால், ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது மிகவும் சுலபம்.

தற்போதைய காலகட்டத்தில், யூடுப் பலருக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். நிறைய யூடுப் சேனல்கள் லட்சங்களில் வருமானத்தை ஈட்டி தருகின்றன. யூடியூபில் பணம் சம்பாதிக்க உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. உங்கள் மொழிலேயே நீங்கள் வீடியோக்கள் அப்லோட் செய்து, அதை பலரும் பார்க்கும்போது உங்களுக்கு விளம்பரதாரர் வருமானம், கூகுள் மூலமாக மாதாமாதம் உங்களுக்கு வந்துகொண்டே இருக்கும்.

நீங்கள் யூடியூபில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால், உங்களுக்கு என்னென்ன தேவை என்று தெரிந்துகொள்ளுங்கள்:

  • ஒரு கேமரா (உங்கள் செல்போன் கேமராவே இதற்க்கு போதுமானது. உங்களிடம் வேறு வகையான கேமரா இருந்தாலும் நல்லது தான்.)
  • நீங்கள், உங்கள் கேமராவை வைத்து எதை படம்பிடிக்க போகிறீர்கள் என்பதை தெளிவாக முடிவு செய்துகொள்ளுங்கள். சிலருக்கு, கேமராமுன் நின்று பேசுவதற்கு பிடிக்கும், சிலர் சமையல் குறிப்புகள், சமையல் கலை என ஏதாவது ஒன்றை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கவோ, அல்லது பேசவோ பிடிக்கும்.
  • வீடியோ எடிட்டிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றாலும், நேர்த்தியாக உங்களது படைப்பை வழங்க வேண்டும் என்றால் கொஞ்சம் வீடியோ எடிட்டிங் செய்து அப்லோடு செய்தால் நன்றாக இருக்கும். இல்லையென்றாலும் பரவாயில்லை, நேரடியாக உங்கள் வீடியோவை அப்லோடு செய்தாலும், அதுவும் நன்றாகத்தான் இருக்கும்.
  • உங்கள் வீடியோவை அப்லோடு செய்யும்போது, அதற்கான தலைப்பு, விளக்கம் என பார்வையாளர்களை கவரக்கூடிய அதற்கான தகவல்களை சேர்த்தே ஆன்லைனில் பதிவிட வேண்டும்.
  • இவையெல்லாம் செய்து முடித்தபின்னர், பெரும் சவாலாக அமைவது, உங்களுக்கு தேவையான “சப்ஸ்க்ரைபர்ஸ்” (subscribers) தான். அதாவது, எவ்வளவுக்கெவ்வளவு உங்களுடைய சேனலுக்கு சப்ஸ்க்ரைபர்ஸ் இருக்கிறார்களோ அவ்வளவு பார்வையாளர்கள் (viewers) உங்கள் வீடியோக்களுக்கு வர வாய்ப்புள்ளது.

    ஆனால், உங்களுடைய பார்வையாளர்கள் எல்லாருமே சப்ஸ்க்ரைபர்ஸ்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை. இருப்பினும், ஏதோ ஒரு விடியோவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை, உங்களின் எல்லா வீடியோக்களும் வர வாய்ப்பில்லை. ஆனால், சாப்ஸ்க்ரைபர்ஸ் அதிகமாக இருந்தால், நீங்கள் நம்பிக்கையாக இருக்கலாம். காரணம், உங்களின் பெரும்பாலான வீடியோக்களுக்கு பார்வையாளர்கள் அதிகம் வர வாய்ப்புள்ளது.

உங்கள் வீடியோக்களுக்கான பார்வையாளர்களை வைத்துதான், உங்களின் வருமானம் நிர்ணயிக்கப்படுகிறது.

சரி, இந்த விஷயத்தை எப்படி எதிர்கொள்வது? வீடியோ பார்வையாளர்களின் எண்ணிக்கைதான், உங்களின் யூட்யூப் வருமானத்தை நிர்ணயிக்கும். இதற்க்கு, நிறைய யூடியூப் சேனல்கள் தங்களுக்கென்று எஸ்.இ.ஓ (SEO) என்று சொல்லக்கூடிய தொழில் தெரிந்த ஆட்களிடம் இந்த வேலையை கொடுத்து விடுவார்கள். அல்லது, அதற்கான வேலை தெரிந்திருந்தால், அதை தாமே செய்துகொள்வார்கள். இருப்பினும், இது வெகு நேரம் பிடிக்கும் வேலை மற்றும் இது கொஞ்சம் டெக்னிக்களான செயலாகும்.

இதெல்லாம் செய்யக்கூடிய ஒரு சாப்ட்வேரை தான் பலர் பயன்படுத்துகிறார்கள். அதுதான், “டியூப் பட்டி (TUBE BUDDY)” என்னும் இந்த சூப்பர் ஆனலைன் சாப்ட்வேர். யூடியூப் வீடியோக்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ள இந்த சாப்ட்வேர் உங்கள் யூடியூப் சேனலுக்கு அதிக சப்ஸ்க்ரைபர்ஸ் வரச்செய்வது, உங்களின் வீடியோக்களுக்கு அதிக பார்வையாளர்களை பார்க்க பரிந்துரைக்க தேவையான அனைத்தையும் செய்வது என உங்களின் யூடியூப் சேனலின் எல்லா டெக்னிக்கள் வேலைகளையும் இது சுலபமாக செய்துவிடும்.

நீங்கள், உங்கள் வீடியோ உருவாக்குவதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். ஒவ்வொரு வீடியோ உருவாக்கவும், “கண்டன்ட் (content)” என்று சொல்லப்படும் விஷயம் மிக முக்கியம். நீங்கள், யூடியூபில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டுமெனில் இதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். மற்ற எல்லா வேலைகளையும், இந்த டியூப் பட்டி பார்த்துக்கொள்ளும்.

நீங்கள் யூடியூபில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தால், நீங்கள் நிச்சயமாக டியூப் பட்டியை நிச்சயம் பயடுத்தலாம். குறைவான நேரத்தில்,உங்களின் வீடியோக்களுக்கு அதிக பார்வையாளர்களையும், சாப்ஸ்க்ரைபர்களையும் உங்களுக்கு வரவழைத்து உங்களை வெற்றிகரமான யூடியூபராக ஆக்கும் என்பது நிச்சயம் உண்மை.

பல வெற்றிகரமான யூடியூப் சேனல் வைத்திருப்பவர்கள் இதைத்தான் செய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், யூடியூப் சேனலுக்கு எஸ்.ஈ.ஓ வேலை செய்து அதிக பார்வையாளர்களை வரவப்பதும் இந்த சாப்ட்வேர் வைத்துதான். இதை நீங்கள் டவுன்லோடு செய்யவேண்டியதில்லை. யூடியூப் மாதிரியே நேரடியாக உங்கள் வீடியோவை அப்லோடு செய்துவிட்டு மற்றவேளைகளை செய்தால் போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.