ஒரு போட்டோவை எப்படி எடுத்தா பார்க்கிறவங்களுக்கு பிடிக்கும்?

சில பேசிக் சைக்கலாஜிக்கல் விதிமுறைகள் இருக்கு. சில காம்போசிசன் பேசிக் முறைகள். அது என்னவென்று பார்க்கலாம்.

இந்த விதி முறைகள் பொத்தாம்பொதுவா சொல்லப்பட்டதல்ல.

மனிதர்களின் கண்கள் ஒரு காட்சியை எப்படி பார்க்கிறது, மூளை எப்படி அதை பதிவு செய்யுது-ங்கிற அறிவியல் அடிப்படையிலானது. அதாவது மனித கண்கள் சடார்னு கண்ண திறந்து பார்த்தாலும், மூலையில் பதிவாவது இடமிருந்து வலம், மேலிருந்து கீழ்-னு வரி வாரியாத்தான் பதிவாகுது. அது மைக்ரோ மில்லி செக்கண்டுல நடப்பதால் நமக்கு அது தெரிவதில்லை. அதன்படி நாம் படம் எடுத்தால் அந்த படத்தை பார்க்கும்போது அட்ராக்சனா இருக்கும்.

முதல் பாயிண்ட் 

பெரும்பாலும் சீனரி படம் எடுக்கிறவங்க கேமராவை நேரா பிடிக்காம கொஞ்சம் சாய்ந்த வாக்குல பிடிச்சு படம் எடுத்திருப்பாங்க. அப்படி எடுத்தா படம் ஈர்ப்பானதா வராது. வந்த படம் கிராஸா இருக்கும். இதற்கு உள்ள முறை, எப்பவும் படம் எடுக்கும்போது, தொலைவில் உள்ள ஹாரிசாண்டல் லைன் சரியான படுக்கை வசமான கோணத்துல இருக்கணும். இப்படி இருந்தா படம் பார்க்க அழகா இருக்கும்.

ரூல் ஆப் செகண்ட்

 எந்த ஒரு படத்தையும் மேலிருந்து கீழ், இடமிருந்து வலமாக மூன்று மூன்று கட்டங்களாக பிரித்துக்கொள்வது. 

இந்த கட்டங்கள் இணையும் புள்ளிகளில் படத்தில் நாம காட்டவிரும்பும் முக்கியமான விஷயங்கள் இருந்தால் அது பார்வையாளர்களுக்கு முதலில் கண்ணில் படும். அப்ப படம் ஈர்ப்பா (ATTRACTIVE)  இருப்பதாக தோன்றும். அடுத்து மனிதர்களை படம்பிடிக்கும் போது கவனிக்க வேண்டியவை.

நாம், பொதுவா செய்யும் தவறு

பாயிண்ட் ஆப் வியூ – பீல்ட் (POINT OF VIEW – FIELD). இதன் படி நாம ஒருவரை படத்தின் ஏதோ ஒரு மூலையில் வைத்து மீதிப்பகுதியில் ஆட்கள் இல்லாமல் காலியாக வைத்து ஒரு படம் எடுத்தால் அப்ப படத்தில் இருப்பவர்கள் எங்கே பார்க்கிறார்களோ அல்லது அவர்களின் முகம் எந்த டைரக்சனில் இருக்கோ அந்தப்பக்கம் பிரேமில் “அதிகமான இடம்” இருக்கவேண்டும். இதில் உள்ள அழகி, எங்க பாக்கிறாங்களோ அந்த கோணத்தில் காலியிடம் இருக்கணும். இது பார்க்கிறவங்களுக்கு படத்தோட மன ரீதியிலான ஒரு கனெக்சன குடுக்கும்.

அதிலேயே WRONG படத்தை பார்த்தா, அவங்க முகம் பார்க்கிற பக்கம் குறைவான இடமும் அதுக்கு எதிர் பக்கம் அதிகமான இடமும் இருக்கு, இப்ப நம்ம மூளைக்கு அவங்க பார்க்கிறது என்னன்னு தெரியாததால், அவங்க பார்க்கிற பக்கத்தை நாம பாக்க முடியாம நம்ம மூளை ஏமாற்றம் அடைவதால் மனசளவில் இந்த படத்துல கனெக்ட் ஆக முடியாது. இந்தப்படத்தில் நல்ல அட்ராக்சன் இருந்தாலும், CORRECT- ஆன  படத்தில் கனெக்ட் ஆகுற அளவுக்கு இதுல ஆக முடியாது.

இன்னும் சில குட்டி குட்டி டிப்ஸ்

இது ரொம்ப பேசிக் – போஸ் குடுக்கிறவங்க லைட்டுக்கு எதிர் திசையில் நின்னு போஸ் குடுப்பது. அதாவது லைட்டு அல்லது வெளிச்சம் அவங்க முகத்தில விழும்படி நின்னு போஸ் குடுப்பது.

அப்புறம், வானம் படத்தில் நல்ல நீல நிறமாத்தெரிய, சூரியன் எந்த கோணத்தில் இருக்கோ, அதற்கு 90 டிகிரி கோணத்தை பார்த்து நாம படம் எடுத்தால் அந்தப்பகுதி வானம் செம்ம புளூவா அழகா படத்தில் தெரியும். எடுத்துக்காட்டுக்கு சூரியன் தலைக்கு மேல 4 மணி கோணத்துல இருந்தா நாம கேமரால 8 மணில சூரியன் எந்த கோணத்துல இருந்ததோ (நான் திசையை சொல்லல, கேமரா பார்க்கும் கோணத்தை சொல்றேன் – Not direction, angle is the matter) அந்தப்பகுதியை பார்த்து படம் எடுத்தா வானம் உச்சகட்ட நீலக் கலர்ல இருக்கும். சூரியன் இருக்கும் பகுதியை பார்த்து எடுத்தா, வானம் வெளிறிப்போன மாதிரி இருக்கும்.

இந்த ரூல்ஸ்களை நியாபகம் வச்சு படங்கள் எடுத்தா, நாம எடுக்கும் சராசரி படங்களே, பாக்கிறவங்கள சூப்பர்-னு சொல்லவைக்கும். 

நன்றி

Tamil ezhilan


If you feel like your images aren’t ‘popping’, take a step or two closer to your subject. Fill the frame with your subject and see how much better your photo will look without so much wasted space. The closer you are to the subject, the better you can see their facial expressions too. The best way to hone your skills is to practice. A lot. Shoot as much as you can – it doesn’t really matter what. Spend hours and hours behind your camera. As your technical skills improve over time, your ability to harness them to tell stories and should too. Don’t worry too much about shooting a certain way to begin with. Before you raise your camera, see where the light is coming from, and use it to your advantage. Whether it is natural light coming from the sun, or an artificial source like a lamp; how can you use it to make your photos better? How is the light interacting with the scene and the subject? Is it highlighting an area or casting interesting shadows? These are all things you can utilize to make an ordinary photo extraordinary. You might think that you should only use flash at night time or indoors, but that’s not the case at all. If it is an extremely bright day outside and the sun is creating harsh shadows on your subject, switch on your flash. By forcing extra light onto your subject, you will be able to fill in those ugly shadows and create an even exposure.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.