குடும்ப தலைவிகளுக்கு தேவையான சமையல் டிப்ஸ்கள் !!!

 • அலமாரிகளில் கற்பூரத்தை வைத்து பூச்சிகள் மற்றும் துர்வாடை வராமல் துணிகளையும், புத்தகங்களையும் பாதுகாக்கலாம்.
 • கற்பூரத்தை வாஷ் பேசின்களிலும்  போட்டு வைக்கலாம். துர்நாற்றம் வீசாது. வாஷ்பேசின் வழியாக கரப்பான் பூச்சிக்கொல்லிகள் வருவது தடுக்கப்படும்.
 • பிரைட் ரைஸ், புளியோதரை போன்ற கலவை சாத உணவுகளை சமைக்கும் போது சில துளிகள் எண்ணெய் அல்லது எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால்  சாதம் ஒட்டாமல் உதிரியாக வரும்.
 • துணியில் ஏதேனும் டீ, காபி கறைகள் இருந்தால் வெந்நீரில் ஊறவைத்து துணிகளை துவைத்தால் அதில் இருக்கும் கறை நீங்கும்.
 • வறுத்த வேர்க்கடலையை பொடியாக்கி வைத்துக் கொண்டால், வெண்டைக்காய் பொரியல், கத்தரிக்காய் கூட்டு சமைக்கும் போது அத்துடன் சேர்க்கலாம். இது சுவையையும் மணத்தையும் அதிகரிக்கும்.
 • இட்லி மாவு புளிக்காமல் இருக்க ஒரு சிறய துண்டு வாழை இலை அல்லது அதன் தணடு சிறு துண்டு அதில் போட்டு வைத்தால் புளிக்காது.
 • பொரியல் செய்யும்போது அடிக்கடி தண்ணீர் தெளித்து வேகவைக்கவும். குழையாமல், அளவாக வெந்து, உதிரியாக இருக்கும்.
 • வீட்டில் உள்ள எலக்ட்ரிக் ஸ்விட்ச்களில் அழுக்கு சேர்ந்து விட்டால் அதை எளிதில் அகற்ற வேண்டும் என்றால் சோடா உப்பு + வினிகர் கலந்த நீரை அதன் மேல் தடவி துடைத்தால் சுவிட்ச் அழுக்கில்லாமல் பளபளப்பாக இருக்கும்.
 • காய்கறிகளை சமைக்கும்போது பாத்திரத்தை மூடி வைத்து சமைத்தால் சமையலும் சீக்கிரம் முடியும் அதில் இருக்கும் சத்துக்களும்  வீணாகாது.
 • கீரை சமைக்கும் போது திறந்து வைத்து தான் வேகவைக்க வேண்டும்.
 • சர்க்கரை, ரவை டப்பாவில் எறும்பு வராமல் இருக்க கிராம்புகளை போட்டு வைக்கவும்.

Homemaking is a mainly American term for the management of a home, otherwise known as housework, housekeeping, or household management. It is the act of overseeing the organizational, day-to-day operations of a house or estate, and the managing of other domestic concerns. Qualities Of A Home Maker is Intelligence.  An intelligent manager is keen on observing, understanding, thinking and remembering. She should develop all ways of gaining knowledge, ability to solve problems and achieve goals. Intelligence also includes mental alertness and ability to grasp knowledge and situation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.