இப்ப கொஞ்சம் பேசிக் போட்டோகிராபி பத்தி சிம்பிளா கொஞ்சம் பாப்போமா?

மொபைல் உலகத்துல ஒவ்வொருத்தரும் பாலுமகேந்திரா தான். இசக்கி இருக்கப்போனாலும் சரி ஐசியூல சாகக்கிடந்தாலும் சரி ஒரு செல்பிய தட்டி விட்டுட்டுத் தான் அடுத்த வேலைங்கிற நிலமைல இருக்கும்போது நாம கொஞ்சூண்டு போட்டோகிராபி பேசிக் பத்தி தெரிஞ்சுக்கிட்டோம்னா, இன்னும் நல்ல நல்ல படங்கள் எடுக்கலாம்ல?

மெகா பிக்ஸல்

மொபைல்ல வரும் மெகாபிக்ஸல் அப்படிங்கிற விஷயம் ஒரு டுபாக்கூரு. அந்த மெகாபிக்ஸல் விஷயம் DSLR எனப்படும் Digital Single Lens Reflex எனப்படும் DSLR கேமராக்களில், அதாங புரொபஷனல் கேமராக்களில் மட்டுமே சரியாக இருக்கிறது.

 மற்றவை கால்குலேட்டடு மெகாபிக்ஸல்கள் அதாவது தோராயமாக கணக்கீடு செய்யப்பட மெகாபிக்ஸல்கள். அதனால் தான் குறைந்த மெகாபிக்ஸல் கொண்ட ஐபோனில் எடுக்கப்படும் படத்துக்கு பயங்கரமா பீலா விடப்பட்ட வேறு சைனீஸ் போனில் எடுக்கப்பட்ட படம் பக்கத்துல கூட வரமுடியறதில்லை.

கேமிரா என்பது என்ன

இப்ப போட்டோ எடுக்க நமக்கு தேவை, புகைப்படம் பதிவு செய்ய ஒரு சென்சார் (அல்லது பிலிம்) மற்றும் ஒளியை உள்ளே அனுப்ப லென்ஸ். இது ரெண்டும் சேர்ந்தது கேமரா.

சென்சார் அளவு, 35mm அளவுள்ள அந்தக்கால பிலிம் சைசுக்கு  இருந்தால் அந்த கேமராக்கள் ஃபுல் பிரேம் கேமராக்கள் அப்படின்னு சொல்றோம் – முழு அளவுள்ள சென்சார் கொண்ட கேமராக்கள். இவற்றில் போட்டோ தரம், தரம்மா இருக்கும். அதை விட குறைவான சைஸ் கொண்ட சென்சார் உள்ள கேமராக்கள் கிராப் (CROP) சென்சார்கள்னு சொல்றோம்.

இதுல சென்சாருக்கு போகும் ஒளியின் அளவு, ஒளி பதிவு செய்யப்படும் நேரம் (ஷட்டர் ஸ்பீடு) மற்றும் டெப்த் ஆப் பீல்டு (Depth of Field) ஆகிய அளவுகளை வைத்து ஒரே போட்டோவை விதம் விதமா எடுக்கலாம்.

இந்த ஒளியின் அளவை, நேரத்தை கட்டுப்படுத்துறது அப்பர்ச்சர் (Aperture) மற்றும் ஷட்டர் ஸ்பீடு (Shutter Speed). டெப்த் ஆப் பீல்டை கட்டுப்படுத்துவது லென்ஸின் ஃபோக்கல் லென்த் (Focal Length). போக்கல் லெங்த் னா என்னங்கிறது வேண்டாம். அது பிஸிக்ஸும் கணக்கும் சேர்ந்தது. கத்தி போடும். டெப்த் ஆப் பீல்டை மட்டும் பின்னர் கொஞ்சம் பாக்கலாம்.

அப்பெர்ச்சர் (aperture)

இந்த வட்ட வடிவமான பிளேடுகள் செட் அபர்ச்சர்னு அழைக்கப்படுது. இந்த பிளேடுகளை சுருக்கி துளையை சிறிதாக்குவதன் மூலம் அல்லது விரித்து பெரிதாக்குவதன் மூலம், கேமராவுக்கு உள்ளே வரும் ஒளியின் அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். அப்பர்ச்சரின் துளை சிறிதாக இருக்குன்னா அதன் அளவீட்டு எண் அதிகமா இருக்கும். துளை பெரிதாக இருக்குன்னா, அளவீட்டு எண் குறைவாக இருக்கும். அப்பர்ச்சரை குறிக்கும் அளவு f. படத்துல f/2.8 பாத்தீங்கன்னா துளை பெரிசா இருக்கும். f/22 துளை குறுகலா இருக்கும். இதன்மூலம் ஒளி உள் போகும் அளவை நாம மாத்தலாம்.

ஷட்டர் ஸ்பீடு (shutter speed)

ஷட்டர் ஸ்பீடு என்பது எவ்வளவு நேரம் நாம் ஒளியை பதிவு செய்யறோம்ங்கிறது. அதாவது மூடியிருக்கும் நம்ம கண்ண திறந்து ஒரு காட்சியை ஒரு நொடி பார்த்துட்டு மூடிக்கிறோம்னா அது ஸ்பீடான ஷட்டர் ஸ்பீட். வேகமா திறந்து மூடிட்டோம். அதே காட்சியை கண்ண திறந்து பத்து நொடிகள் பார்த்துட்டு கண்ண மூடிக்கிறோம்னா சுலோவான ஷட்டர் ஸ்பீட்.

டெத் ஆப் பீல்டு (death of field)

அடுத்து டெப்த் ஆப் பீல்டு என்பது. இது என்னன்னா, நாம் எடுக்கும் படத்துல தெளிவான போக்கஸ் எவ்ளோ தூரம் இருக்குங்கிறது. இப்படி படத்துல தெளிவான போக்கஸ்க்குள்ள இருக்கும் தூரம்தான் டெப்த் ஆப் பீல்டு.

இப்ப அப்பர்ச்சரை சுருக்க சுருக்க படம் கருமை ஆகிட்டே போகும் – உள்ளே வரும் ஒளி குறைவதால். ஆனா அதே சமையம் டெப்த் ஆப் பீல்டு என்பது அதிகமாகிட்டே போகும். அதான் டெக்னிக். 

அதே மாதிரி ஷட்டர் ஸ்பீடை குறைக்க குறைக்க (ஷட்டர் திறந்த பின் மெதுவாக மூடுவது) படம் வெள்ளையாகிட்டே வரும். ஷட்டர் மூடிதித்திறக்கும் ஸ்பீடை குறைத்தால் ஒளி அதிக நேரம் உள்ளே வரும், அதனால் படம் பிரைட்டாகும் / வெள்ளையாகும். ஷட்டர் ஸ்பீடை அதிகரித்தால் வேகமாக திறந்து மூடுவதால் ஒளி பதிவாகும் நேரம் குறையும். அப்ப படம் கருமை ஆகும். இதன் கூடவே படத்தில் இருக்கும் உருவம் அசைந்ததுபோல் இருக்கும். 

ஷட்டர் ஸ்பீடு அளவுகள்

ஷட்டர் ஸ்பீடில் அளவுகள் 1/500 னா ஷட்டர் திறந்து மூடும் நேரம், ஒரு நொடியை 500ஆ பிரிச்சா எவ்ளோ வேகம் இருக்குமோ அவ்ளோ வேகத்தில் திறந்து மூடுவது. அதே 1/4 னா ஒரு நொடியை நாலா பிரிச்சா எவ்ளோ வேகம் இருக்குமோ அந்த வேகத்தில் திறந்து மூடுவது. அதாவது கால் நொடிக்கு ஷட்டரை திறப்பது. இப்படி கால் நொடிக்கு திறப்பதால் படத்தில் உள்ள காத்தாடி நகர்வது பதிவாகி இருக்கு.

இதுவரைக்கும் புரிஞ்சுதுல்ல? இது டெக்கினிக்கல் பேசிக்.

நன்றி

Tamil Ezhilan


Successful photos rely on order, and the main elements that bring and emphasize order in a composition are: line, shape, form, texture, pattern, and color. Every photograph, intentionally or not, contains one or more of these element, which are known as the elements of design. There are three main camera settings to do this, namely, Aperture, Shutter Speed and ISO. To use Manual exposure mode, turn your camera mode dial to [M]. The photographer sets both the aperture and the shutter speed. Set the value for either one of them first. Then, use the exposure level indicator in your viewfinder to help you set the value for the other.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.