நன்றி உரைப்பதை மறவாமல் செய்ய வேண்டிய கடமையாக வைத்து கொள்ளவும்!

மூன்று எழுத்து வார்த்தைகளான அன்பு, காதல் வரிசையில் நன்றி என்ற சொல்லும் மிக இன்றியமையாதது. முகதாட்சண்யத்திற்க்காக கூறும் நன்றியாக இல்லாமல் இதயத்தில் இருந்து வெளிவரும் சொல்லாக இருத்தல் நன்று.

நன்றி ஆகச்சிறந்த வார்த்தை

நன்றி என்பது யாரையும் புண்படுத்தாத வார்த்தை.எவராலும், எந்த மொழியினராலும் எளிதாக பிரயோகிக்க கூடிய வார்த்தை. அனைவருக்கும் மகிழ்வும், நெகிழ்வும் தரும் வார்த்தை. இந்த ஒரு வார்த்தை தான் நம் தரத்தையும், மனிதனின் நாகரீகத்தை உணர்த்தும் வார்த்தையும் கூட.

வாழ்வின் தொடக்கம் முதல் முடிவு வரை யாருக்கேனும் ஒவ்வொரு நொடியும் என அடிக்கடி நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். ஊசி முனை அளவு உதவி என்றாலும் அதை ஞாலம் அளவென்று எண்ணி ஒவ்வொரு உறவுக்கும், நட்புக்கும் ஒவ்வொரு நொடியும் நன்றி கூறுவோம். தாமதமின்றி உரிய நேரத்தில் செயலாற்ற வேண்டிய கடமை தான் நன்றியை வெளிப்படுத்துதல்.

நம்மை புறக்கணித்தவருக்கும், வேதனையால் துடிக்க செய்து விரும்பி ரசித்தவருக்கும், துன்பம் தந்து அதன் வழி முன்னேறும் மன தைரியம் அளித்த எதிரிக்கும் நன்றி சொல்வோம். உதவியவர்கள் நமக்கு வாழ்வளித்தவர்கள் என்றால் துரோகிகள் நமக்கு வாழ்க்கையை உணர்த்தியவர்கள், முன்னவர் பின்னவர் இருவருமே நமக்கு வாழ்க்கையை உணர்த்தியவர்கள் தான்.

வாழ்க்கை பாடம் கற்று தரும் துரோகிக்கும் நன்றி சொல்வோம். புன்னகைக்க கற்று தரும் பூக்களுக்கு நன்றி சொல்வோம். வாழ்வோடு பின்னிப் பிணைந்த இயற்கைக்கு நன்றி சொல்வோம். உண்ணும் உணவிற்கு நன்றி சொல்வோம்.

உடுத்தும் செம்மையான உடைக்கு நன்றி சொல்வோம். உயிர் காற்றை பிரதிபலன் இன்றி தரும் மரங்களுக்கு நன்றி சொல்வோம். கற்ற கல்விக்கும், பெற்ற பணிக்கும் அதற்கு நம்மை தயார் படுத்திய ஆசான்களுக்கு நன்றி சொல்வோம். ஒரு நாள் நம்மை இழந்து நம்மை துடிக்க வைக்க போகும் அன்பு கொண்ட இதயங்களுக்கும் நன்றி சொல்வோம். நன்றி என்பது வார்த்தையல்ல வாழ்க்கை நிலையின் செம்மையை உணர்த்தும் சொல்!


Apologies can be difficult, even awkward, to make, especially in the workplace because you are dealing with personal feelings in a professional setting. However, apologies are almost always appreciated when they are well thought out and sincere. While some people believe apologies, particularly in the workplace, are a sign of weakness, they can instead demonstrate that you are capable and in control – after all, an apology establishes that you recognize an error and how to fix it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.