தமிழ் திரையிசையில் இலக்கிய பாடல்களை கேட்டதுண்டா?

இசையில் மயங்காதவர் எவர் உண்டு. அழகு தமிழில், காதுகளுக்கு இனிமையான திரைப்பாடல்களே நமது பெரும்பாலோனரின் பொழுதுபோக்கு. பலநேரங்களில் நமக்கு மனதிற்கு ஆறுதலாகவும், காதலில் உருகவும், காதல் தோல்வியில் கரையவும். என அனைத்துவித உணர்ச்சிகளை அள்ளித்தந்தவை நமது திரைப்பாடல்கள்.

சங்க இலக்கியங்கள் ஒரு அமுதசுரபி

நமது சங்க இலக்கியங்களை தவிர்த்து நம்மால் நமது கலைகளை ஒரு போதும் கொண்டாட முடியாது.  நமது இலக்கியங்களில் வீரம், போர், இரக்கம், பக்தி, காதல், மருத்துவம், திருமணம், உணவு, நன்று, தீது என்று அத்துணைக்கும் பாடல்கள். நமது திரையிசைப்பாடல்களை எழுதிய கவிஞர்கள் தமிழ் ஆர்வம் உள்ளவர்கள் என்பதால் சங்கப்பாடல்களை அடிப்படையாக கொண்டு பல பாடல்களை எழுதி உள்ளார்கள். சங்கப்பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதியிருப்பார்களோ என்று நினைக்கும் அளவுக்கு திரைப்பாடல்கள் உள்ளது அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்.

திருமண நாளைத் தள்ளிப்போட்டுவிட்டு அவன் பிரிந்தான். தலைமகள் தன் கவலையைத் தோழியிடம் சொல்கிறாள்.

“நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்

தினிதடங் கினரே மாக்கண் ….

-பதுமனார் 

குறுந்தொகை பாடல் – 6

இதற்கேற்ற திரைப்பாடல்

“சாடல் எழுதி வைச்ச சாந்து சுவத்தில் எல்லாம் ஆடி மழையடிச்சு அத்தனையும் கரைஞ்சிருச்சு ….

தாங்கலையே தாங்கலையே ஆசை வைச்ச இந்த மனம் ….

வாழ வைச்சு பாக்கலயே சேர்ந்திருந்த ஊரு சனம்….

ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க ஸ்ரீரங்கம் தான் உறங்க 

தலைவியை அழைத்துக்கொண்டு தன்னுடன் செல்ல விரும்பாத தலைவன் தலைவியிடம் பக்குவமாகச் சொல்கிறான்.

குறுந்தொகை பாடல்: 56 

“வேட்டச் செந்நாய் கிளைத்தூண் “,

தைரியம் இருந்தால் என்னுடன் வா! தாகம் தீர்க்க, வழியில் நல்ல தண்ணீர் கிடைக்காது. வேட்டையாடிய செந்நாய் கலக்கி உண்டபின் மீதமுள்ள நீரைத்தான் பருகவேண்டும். அந்த நீரிலும் கொட்டும் குளவி மொய்த்துக்கொண்டிருக்கும். அவ்விடத்திற்குச் செல்லும் வழியும் வழுக்கும். உனது மென்மையான வளையல் அணிந்த கையால் அதனை உண்ண தைரியம் இருந்தால்  என்னுடன் வா!

பாடியவர்

சிறைக்குடி யாந்தையார்.

திரைப்பாடல்

என் மேல நீ ஆசை கொண்டாலும் தப்பில்ல.

என்றாலும் குயிலுக்கு நின்றாட கொப்பில….

பொல்லாப்பு வேணா புள்ள

பூச்சூடும் காலம் வல்ல

நான் தூங்க பாயும் இல்ல

நீ வந்த நியாயம் இல்ல… சின்னப் பொண்ணு சேல

சங்க இலக்கிய பாடல்களை லயித்து படிக்கும் போது, அதன் தொடர்பான திரைப்பாடல்களை கேட்கும் போது இனம் பிரித்து ரசிக்கலாம்.


Tamil film songs have the lines from Tamil literature’s. Tamil literature’s play a vital role in Tamil movie songs which are pleasing to hear and have great meanings. All kind of songs are taken from Tamil literature’s most of our Mahakavi Bharathiyar songs are used in Tamil Film movies.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.