தேசிய அறிவியல் தினம்

காதலர் தினம் என்றால் என்ன என்று 10 வயது சிறுவனில் இருந்து பல் விழுந்த முதியவர் வரைக்கும் சொல்வார்கள், நுகர்வு கலாச்சாரம் பரப்பிய விஷவிதை. ஆனால் அறிவியல் தினம் பற்றி படிக்கும் பிள்ளைகளுக்கும் தெரிந்து கொள்ள ஆர்வமில்லை. தெரிந்தவர்களுக்கும் சொல்லிக்கொடுக்க நேரமில்லை.

தெரிந்துகொள்வோம் அறிவியல் தினம்

சர் சி. வி. ராமன் அவர்கள் தன் கண்டுபிடிப்பான (Raman Effect) ராமன் விளைவு கண்டுபிடித்த தினம் தான் பிப்ரவரி 28. இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்று தந்தது. மேலும் அவருக்கு உயரிய விருதான நோபல் பரிசும்(1930)  கிடைத்தது. இதில் நாம் பெருமை கொள்ளும் மற்றொரு செய்தி இவர் ஒரு தமிழர். ஊர் திருச்சிராப்பள்ளி. முழுப்பெயர்: சந்திரசேகர வெங்கடராமன் பிறப்பு இறப்பு: நவம்பர் 7, 1888 – நவம்பர் 21, 1970.

கல்வி விவரம்

சென்னை மாகாண முதன்மைக் கல்லூரியில் இயற்பியல் மற்றும் ஆங்கிலத்தில் தங்க பதக்கம் பெற்ற மாணவர். கொல்கத்தாவில் இந்திய அரசுபணியில் சேர்ந்தார். அதன் பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில்  பணியாற்றும் காலத்தில் தான் தன் கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்தார். 

1934ல் பெங்களூர் இந்திய அறிவியல் கழக முதல்வராக பொறுப்பேற்றார். உலக அரங்கில் இந்தியாவின் புகழை தலை நிமிர வைத்தவர் சர்.சி.வி.வெங்கட்ராமன்.

தேசிய அறிவியல் தினம் கொண்டாடுவதற்க்கான நோக்கம்

அறிவியல் என்பது வெறும் விஞ்ஞானிகளுக்கும் படித்தவர்களுக்குமான சொத்தல்ல. அவை அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும். அது தான் அறிவியலின் வெற்றியாக கருத முடியும். ஆரோக்கியம் முதல் அணு ஆராய்ச்சி வரை எல்லா பயனும் சாதாரண பாமரனை சென்றடைய வேண்டும். அவன் வாழ்கை தரம் உயர வேண்டும். குழந்தைப்பருவத்தில் இருந்தே அறிவியல் ஆர்வத்தையும் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும்.

அறிவியல் ஒரு பாடம் அல்ல, அது வாழ்கையின் அங்கம் என்பதை மாணவர்களுக்கு புரிய வேண்டும். புத்தகத்தில் படித்ததை  நிஜவாழ்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் திறனை வளர்க்க வேண்டும்.

அறிவியலின் வளர்ச்சி

ஏன்? எதற்கு?? எப்படி??? என்றும் எழும் கேள்விகளும் அதற்கான தேடலும் தான் அறிவியல் வளர்ச்சிக்கு வித்திடும். சிந்தனையும், தேடலும் தான்  கல் கொண்டு வேட்டையாடிய மனிதனை இன்று கணிப்பொறியோடு வாழ வைத்துள்ளது. 


National Science Day is celebrated all over India with great enthusiasm on February 28 every year to commemorate the discovery of the Raman Effect by the Indian physicist, Dr. Chandrasekhara Venkata Raman on the same day in the year 1928. National Science Day is celebrated as one of the prominent science festivals in India every year, during which students of various schools and colleges demonstrate motley of science projects as well as national and state science institutions exhibit their latest researches. In the spirit of this day, SPACE conducts various science related activities with public, school and college students. We have successfully organized various programmes such as Astronomy fairs and competitions with the objective to create enthusiasm among people and to inculcate scientific temper among the masses.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.