நீங்கள் சார்ஜ்ர் வைத்திருந்தாலும், அதை பயன்படுத்தி உங்களால் சார்ஜ் செய்துகொள்ள ஏதேனும் ஒரு வாய்ப்பு இருந்தால் மட்டுமே உங்களால் அதை செய்ய முடியும். ஒருவேளை உங்கள் மொபைலில் மாற்றக்கூடிய பேட்டரி இருந்தால், நீங்கள் அதை சார்ஜ் உள்ள வேறு ஒரு பட்டேரியை மாற்றி போட்டு உங்கள் வேலையை தொடரலாம்.
சரி, அந்தமாதிரி மொபைல் போன்கள் சந்தையில் இன்றும் உள்ளன. ஆனால், அவை எதுவும் இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் வகையை சார்ந்தது அல்ல. அதாவது, பேட்டரி மாற்றக்கூடிய வகையில் உள்ள போன்கள் எதுவும் டச் போன் அல்ல.
தற்போதுள்ள எல்லா ஸ்மார்ட்போன்களும் பேட்டரி மாற்ற முடியாதவாறே விற்கப்படுகின்றன. இதில் உள்ள பேட்டரி போனோடு பசை மூலம் நன்கு ஒட்டப்பட்டிருக்கும் அல்லது, ஸ்க்ரூ போட்டு நன்கு முடுக்கப்பட்டிருக்கும். இதை நீங்கள் வெளியில் எடுக்க வேண்டுமென்றால் எளிதானதல்ல. அப்படியே சிரமப்பட்டு பேட்டரியை வெளியே எடுத்தாலும் உங்கள் மொபைலுக்கு உத்தரவாதமில்லை.
Removable battery என்று சொல்லக்கூடிய, நாமே மாற்றிக்கொள்ளக்கூடிய வகை தற்போது ஏன் தயாரிக்க படுவதில்லை?
இப்படி ஸ்லிம்மாக போன்களை தயாரிப்பதினால் போனின் சைஸ் மட்டும் குறைவதில்லை மிக முக்கியமாக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் போன் விற்க முடிகிறது. கழட்டி மாட்டும் பேட்டரி வைத்து தயாரித்தால், போனின் விலையும் அதிகமாக கூடும்.
கழட்டி-மட்டும் வகையிலான (Removable Battery) பாட்டரி பொருத்தினால் water resist or water proof மொபைல்களை தயாரிக்க முடியாது. இதனால் சிறு தண்ணீர் பட்டாலும் உங்கள் போன் வீணாகிவிடும். ஆனால், தற்போதுள்ள Non-Removable பேட்டரி வகை மொபைல்களில் பெரும்பாலும் water resist வசதியுடன் சந்தையில் விற்கப்படுகிறது.
Non-removable பேட்டரி கொண்ட போன் திருடுபோனால், உங்கள் போன்களில் நீங்கள் tracking option அல்லது வேறு ஏதேனும் பாதுகாப்பு சம்பந்தமான option ஏதேனும் செய்துவைத்திருந்தால் திருடர்களால் சுலபமாக உங்கள் போனை பயன்படுத்த முடியாது. அதுமட்டுமல்லாமல் உங்கள் தொலைந்த போனை கண்டுபிடிப்பதற்கு உங்களுக்கு எதுவாக இருக்கும்.
இந்த non-removable பேட்டரி கொண்ட, தற்போதுள்ள ஸ்மார்ட்போன்களின் காலம் சராசரியாக 24 மாதங்கள், அதாவது இரண்டு வருடம்தான். அதன்பிறகு நீங்கள் உங்கள் போனை அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டும், சீக்கிரமே சார்ஜ் இறங்கிவிடும். உங்கள் போனின் மற்ற செயல்பாடுகள் எல்லாம் நன்றாக இருந்தாலும், சார்ஜ் அடிக்கடி இறங்கிவிடுவதால் நிச்சயமாக நீங்கள் வேற போன் வாங்கவேண்டியதுதான். Non-removable battery வகை இல்லாததால், நீங்கள் முழு போனையும் மாற்றிவிட்டு புது போன் வாங்கவேண்டியதுதான்.
சரி, உங்கள் போனில் அதிக நேரம் சார்ஜ் இருக்கவேண்டும், மற்றும் அதிக நாட்கள் உங்கள் போனை நீங்கள் முழு capacity-யுடன் பயன்படுத்த, இந்த 10 வழிமுறைகளையும் கையாளுங்கள். உங்கள் பேட்டரியின் ஆயுட்காலமும் நீண்டுவரும்.
- Location Tracking என்கிற option-ஐ பாருங்கள். நிறைய அப்ளிகேஷன்கள் location tracking ஆன் செய்திருந்தால் தான் சரியாக வேலை செய்யும். ஆனால், இவற்றில் உங்களுக்கு தேவையில்லாத பல அப்ளிகேஷன்கள் location tracking அப்ளிகேஷனை பயன்படுத்திக் கொண்டிருக்கும். உங்களின் ஆண்டிராய்டு போனோ அல்லது ஐ போனோ, எதுவாக இருந்தாலும் location tracking இயங்குகிறதா என்று பார்த்து, தேவையில்லாதவற்றை off செய்துவிடுங்கள். இதில் நிறைய சமூக வலைதள அப்ளிகேஷனும் அடங்கும். உங்கள் போனில் location tracking ON-ல் இருந்தால், நீங்கள் போனை பயன்படுத்தாத போதும் உங்கள் சார்ஜ் இறங்கிக்கொண்டுதான் இருக்கும். இதனால் உங்களின் தனிமையும் பாதுகாக்க படுகிறது என்பதும் கூடுதல் நன்மை.
- Wallpaper என்று சொல்லக்கூடிய உங்கள் சகிரீனில் உள்ள படங்களை கவனியுங்கள். மிகவும் பளிச்சென்று அதிக வெளிச்சத்துடன் இருக்கும் wallpaper-களால் உங்கள் போனின் பேட்டரி உபயோக படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல், தானாக மாறும் வால்பேப்பர் வசதியை உங்கள் போனில் நீங்கள் வைத்திருந்தால், அதுவும் உங்களின் பேட்டரியை அதிகம் பயன்படுத்தும். இதையும் disable செய்வது நல்லது. இது பேட்டரியை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் டேட்டாவையும் நிறைய மிச்சப்படுத்தும் என்பதும் கூடுதல் உண்மை.
- Automatic updates என்று சொல்லக்கூடிய option-யையும் disable செய்யுங்கள். ஒவ்வொரு அப்ளிகேஷனும் ஒவ்வொரு சமயங்களில் updates-களை செய்துகொண்டிருக்கும். இதை நீங்கள் தவிர்த்தால், உங்கள் பேட்டரி நிச்சயமாக நீண்ட நேரம் வரும். கூடுதலாக, தேவையில்லாத updates-களை தவிர்ப்பதால், உங்கள் போனின் memory-யும் நெறைய இருக்கும். உங்களுக்கு எப்பொழுது, எந்த அப்ளிகேஷனை update செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்பொழுது நீங்களே உங்களுக்கு வசதியான நேரத்தில் update செய்துகொள்ளலாம்.
- உங்கள் மொபைல் போனின் பேட்டரி மிகவும் குறைவாக உள்ளபோது, நீங்கள் நீண்ட நேரம் உங்கள் போனை பயன்படுத்த வேண்டிய தேவை இருந்தால், Settings > Battery > Usage சென்று பாருங்கள். எந்தெந்த அப்ளிகேஷன் எவ்வளவு பேட்டரியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாக தெரியும். அந்த சமையம் உங்களுக்கு தேவையில்லாத அப்ளிகேஷன் எதுவாக இருந்தாலும் அவற்றை disable செய்துவிடுங்கள். இதனால், உங்கள் போனை அவசரத்திற்கு நீங்கள் நீண்ட நேரம் பயன்படுத்தலாம். இதை கவனிக்காமல் விட்டால், சில சமயங்களில் உங்களுக்கு மிகவும் தேவையான நேரத்தில்கூட உங்கள் மொபைல் உங்களுக்கு கைகொடுக்காது.
- பிரைட்னஸ் என்று சொல்லக்கூடிய மொபைல் போனின் ஸ்கிரீன் வெளிச்சத்தை எப்பொழுதுமே குறைவாக வைத்துக்கொள்வது நல்லது. இதுவும் மிக அதிகப்படியான பேட்டரி பவரை எடுத்துக்கொள்ளும். சில மொபைல் போன்களில் auto adjust brightness வசதி இருக்கும். அதாவது சுற்றியுள்ள வெளிச்சத்திற்கேற்றவாறு அதுவே brightness கூட்டி குறைத்துக்கொள்ளும். இருப்பினும், நீங்களே தேவையான அளவிற்கும் குறைத்துக்கொள்வது நல்லது. Auto-adjust brightness இருந்தாலும், நீங்களே ஸ்க்ரீன் வெளிச்சத்தை குறைத்துக்கொள்வது உங்கள் கண்களுக்கும் நல்லது, உங்கள் மொபைலின் பேட்டரியை வெகுவாக சேமிக்கும்.
- பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் இறங்கவிடுவது உங்கள் போனுக்கு நல்லதல்ல. நிறையபேர், போன் சுவிட்ச் ஆப் ஆகும்வரை காத்திருந்து பிறகுதான் சார்ஜ் செய்வார்கள். இது மிகவும் தவறு. போனை 0% வரை சார்ஜ் இறங்கவிடுவதும், 100% ஆகும் வரை சார்ஜ் செய்வதும் உங்கள் பேட்டரியை சீக்கிரம் வீணாக்கிவிடும். எப்பொழுதும் 40%-80% வரை உங்கள் சார்ஜ் இருப்பதாக பார்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் போனின் பேட்டரியை நன்கு பராமரிக்க உதவும்.
- Bluetooth மற்றும் Wi-Fi இந்த இரண்டு option-களையும் நிச்சயமாக, தேவைல்லாதபோது ஆப் செய்வது நல்லது. நீங்கள், மறதியாக ஆப் செய்யாமல் அப்படியே விடுவதினால், இதுவும் நிறைய பேட்டரியை உறிஞ்சிவிடும்.
- Push Notifications – என்று சொல்லக்கூடிய இந்த option-யையும் disable செய்துவிடுங்கள். அதாவது, நீங்கள் வைத்திருக்கும் அப்ளிகேஷன்களில் ஏதேனும் புது தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டால் உடனே உங்களுக்கு alert வரும். இதுதான் push notification என்கிற வசதி. இதையும், நீங்கள் உங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றிவைத்து கொள்ளலாம். அதாவது, உங்களுக்கு தேவையான சேவைகளுக்கு மட்டும் இதை on செய்து வைத்துவிட்டு, தேவைல்லாததை off செய்துவிடுங்கள். உதாரணத்திற்கு, நீங்கள் ஏதேனும் தினசரி செய்திகள் சார்ந்த அப்ளிகேஷன் வைத்திருந்தால், ஒவ்வொரு புது செய்து வரும்போதும் அந்த அப்ளிகேஷனில் இருந்து உங்களுக்கு தொடர்ந்து updates வந்துகொண்டே இருக்கும். இதை off செய்வதால் பேட்டரி சார்ஜ் நீடிக்கப்படுவது மட்டுமல்லாமல் அடிக்கடி உங்களை அலெர்ட் செய்வதிலிருந்தும் நீங்கள் விடுபடலாம்.
- உங்கள் போன் சூட்டுவதை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள். நீங்கள் நீண்ட நேரம் ஏதேனும் ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்திக் கொண்டிருந்தால் போன் சூடாகிவிடும். லேசான சூடு தெரிந்தால் உங்கள் போனிற்கு சிறிது வினாடி ஓய்வு கொடுப்பது நல்லது. சூடு மட்டுமல்ல, extreme temperature எதுவாக இருந்தாலும் பேட்டரியின் சிரமம் அதிகரித்து அதன் ஆக்கம் குறைந்துவிடும். நெறைய குளிரில் பேட்டரியை வைத்திருந்தாலும் இதுதான் நிலைமை. சில சமயங்களில் உங்கள் போனை மறந்து காரிலேயே விட்டுவிட்டு செல்வது வழக்கமாக இருந்தால் அப்படி செய்யவேண்டாம். அதிக சூடோ, அல்லது அதிக குளிர்ச்சியா இருந்தாலும் போன் அதை செயலில் வைத்துக்கொள்ள சிரமம், இதனால் பேட்டரியின் ரிஸ்க் அதிகம். இந்த காரணங்களால் தான், உங்கள் மொபைல் போனை தலையணை அடியில் வைத்து தூங்கக்கூடாது. பேட்டரியின் temperature மாறுவதால் அதன் தன்மை மாறி, விளைவுகளை ஏற்படுத்தும். மிக முக்கியமாக போனை சார்ஜில் போட்டுவிட்டு தலையணை அடியில் வைப்பது ஆபத்தில் முடியும்.
- Screen Timeout என்கிற ஒரு வசதி இருக்கும், அதை கம்மியாக வைய்யுங்கள். அதாவது, நீங்கள் உங்கள் போனை பேசி முடித்தபிறகு, அல்லது வேறு ஏதாவது பயன்பாட்டிற்கு பிறகு, சிறிது நேரம் போனின் வெளிச்சம் இருக்கும். ஓரிரு வினாடிகள் கழித்துதான் போனின் ஸ்க்ரீன் off ஆகும். இந்த நேரத்தைத்தான் screen timeout என்பார்கள். சராசரியாக இது 1-2 நிமிடங்கள் வரை இது இருக்கும். இதை, நீங்கள் விரும்புவது போல் எத்தனை வினாடியும் வைத்துக்கொள்ளலாம். தேவையே இல்லாதபோது, எதற்காக மொபில் ஸ்க்ரீன் நீண்டநேரம் வெளிச்சமாக இருக்கவேண்டும். அதனால், இந்த நிறைத்தையும் குறைத்து வைத்துக்கொள்வது உங்கள் பேட்டரிக்கு நல்லது. உங்கள் மொபைலின் பேட்டரி நேரம் கூடுதலாக இருக்கும்.
- போன் சார்ஜில் இருக்கும்போது உபயோக படுத்துவதை தவிர்க்கவும். குறுஞ்செய்தி அல்லது வாட்ஸாப் தகவல்களை படிப்பது அல்லது பயன்படுத்துவது, வீடியோக்கள் பார்ப்பது, மொபைலில் கேம் விளையாடுவது என அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. இது, உங்களுடைய பேட்டரியின் charging cycle என சொல்லப்படும் முறையை பாதிப்பதினால், உங்கள் மொபைல் பேட்டரி சீக்கிரம் அதன் திறனை இழந்துவிடும். நீங்கள் பயன்படுத்தும்போது போனை சுவிட்ச் ஆப் செய்துவிடுங்கள். அல்லது, சார்ஜில் இருக்கும்போது பயன்படுத்தாதீர்கள்.
- Airplane Mode எனப்படும் இந்த option நீங்கள் விமானத்தில் பயணிக்கும்போது மட்டும் பயன்படுத்துவதற்காக அல்ல. Airplane Mode-இல் உங்களின் போனை வைப்பதால், உங்கள் மொபைல், ரேடியோ அலைகளை அனுப்புவதை முற்றிலுமாக துண்டித்துவிடுவதால், உங்கள் மொபைல் எந்த ஒரு வெளிதொடர்பும் இல்லாமல் துண்டிக்கப்பட்டுவிடும். ஈ-மெயில், அழைப்புகள், குறுஞ்செய்திகள், wi-fi, Bluetooth, என எதுவுமே வராது. எப்பொழுதும் இணைப்பில் இருக்க வேண்டும் என்பவர்களுக்கு இது தேவையில்லாத ஒரு option-ஆக தெரியலாம் ஆனால், உங்கள் பேட்டரியின் அளவு மிக மிக குறைவாக இருக்கும்போது அதை காப்பாற்றிக்கொள்ள இதுதான் ஒரே வழி. உங்களுக்கு எப்பொழுது தேவையோ, அப்பொழுது நீங்கள் இந்த Flight Mode அல்லது Aeroplane Mode-லிருந்து வந்துவிடலாம்.
இவை அனைத்தும், பெரும்பாலும் நமக்கு தெரிந்த விஷயங்கள் தான், ஆனாலும் கொஞ்சம் நிமிஷம் செலவிட்டு இதையெல்லாம் செய்தால் உங்கள் மொபைலின் பேட்டரி ரொம்ப நேரம் வரும் என்பது மட்டுமல்ல, உங்கள் மொபைலின் ஆயுட்காலமும் நீட்டிக்கப்படும் என்பது உண்மை. முன்னரே சொன்னது போல, non-detachable battery இருப்பதால், பேட்டரி போனால் உங்கள் மொபைலையும் நீங்கள் புதிதாக மாற்ற வேண்டியதாய் இருக்கும்.