வாயில் புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்ன?

வாய்வழிக் குழியில் புற்றுத்த்திசுக்கள் வளர்ந்து புற்றுக்கட்டிகளாக வளர்வதே வாய்ப்புற்று ஆகும். பொதுவாக இந்த வகை புற்றுநோய் நாக்கையே பாதிக்கிறது. உள்வாயின் அடிப்பகுதியிலும், கன்னத்தின் உட்பகுதியிலும், ஈறுகளிலும், உதட்டிலும், அண்ணத்திலும் கூட  இது உருவாகலாம்.

வாயில் வரும் புற்றுநோய்களில் சில அரிய வகைகளாவன

 • வாய்க்கரும் புற்று – தோலுக்கு நிறம் தரும் மெலனோசைட்டில் உருவாகும் புற்று
 • சுரப்பிப்புற்று – உமிழ்நீர் சுரப்பிக்குள் உருவாகும் புற்று நோயறிகுறிகள்

அறிகுறிகள்

 • வாயின் உள்ளும், நாக்கிலும் சிவப்பு அல்லது சிவப்பு, வெள்ளைத் திட்டுகள் இருத்தல்
 • மூன்று வாரங்களுக்கு மேல் ஆறாத ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட வாய்ப்புண்கள்
 • மூன்று வாரங்களுக்கு மேல் நீடிக்கும் வாய் வீக்கம்
 • விழுங்கும்போது வலி
 • கழுத்தில் நீடித்த வலி
 • கரகரப்பான குரல்
 • திடிர் உடல் எடை குறைவு
 • சுவையை உணர முடியாது
 • காதில் வலி
 • கழுத்தில் உள்ள நிணநீர்ச் சுரப்பிகளில் வீக்கம்

புற்றுநோய் வருவதற்கான காரணங்கள்

 • டி.என்.ஏ. வில் ஏற்படும் பிழையால் புற்றணுக்கள் வேகமாக  வளரும்.
 • புகைபிடித்தல் சிகரெட் , பீடி, சுருட்டு, புகைக்குழாய் அனைத்துமே காரணம்.
 • தொடர்ந்து வெற்றிலை, பாக்கு, புகையிலை பயன்பாடு.
 • மது அருந்துதலுமே வாய்ப்புற்றுக்கான முக்கிய காரணம்.
 • புகை, மது இரண்டுமே புற்றுநோயைத் தூண்டுவன. அதாவது அவற்றில் உள்ள வேதியற் பொருட்கள் டி.என்.ஏ.மரபணுக்களைப் பாதித்துப் புற்றுநோய்க்கு  வழிவகுக்கும்.
 • புகையற்ற புகையிலை, பாக்கு செல்லுதல், மூக்குப்பொடி, கஞ்சா புகைப்பதும் வாய்ப்புற்று வருவதற்கான சாத்தியக் கூற்றை அதிகரிக்கிறது.
 • மனித பாப்பிலோமா வைரஸ் (Human papilloma virus (HPV).
 • கர்ப்பவாய், ஆசனவாய், வாய், தொண்டை போன்ற ஈரப்பசையுள்ள சவ்வுகளைப் பாதிக்கும் ஒரு வகையான வைரசுகளே மனித பாப்பிலோமா வைரசுகள். இவற்றின் பாதிப்பால் சில திசுக்கள் அசாதாரணமாக வளர்ந்து பெருகி புற்றுநோயாக மாறலாம்.
 • பற்களால் கூட புற்றுநோய் வரும்.
 • பற்சிதைவு, ஈறுநோய்கள், முறையாக பல்விலக்காமை, சரியாகப் பொருத்தாதப் பொய்ப்பல்லால் வரும் புண் ஆகியவை வாய்ப்புற்றுக்கான ஆபத்தை அதிகரிக்கிறது.

Surgery is often the first treatment option for lip cancer that has been detected at an early stage.Surgery also may be included in a treatment program for advanced-stage cancer. Radiation therapy, chemotherapy and targeted drug therapy, or a combination of these, also may be options for patients with lip cancer. Most patients with stage I or II oral cavity and oropharyngeal cancer do well when treated with surgery and/or radiation therapy. It can be used alone, but it’s most often used after surgery to treat any cancer cells that may be left behind. Both surgery and radiation work well in treating these cancers. Oral cancer is fairly common and very curable if found and treated at an early stage. A healthcare provider or dentist usually finds oral cancer in its early stages because the mouth can be easily examined.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.