மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்!

அடுத்தவர்கள் காரியங்களில் தலையிடாதீர்கள்

எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் வரும் போது தான் அடுத்தவர் விஷயங்களில் தலையீடு செய்ய தோன்றும். இதற்குக் காரணம் நம் வழிதான் சிறந்தது, நமக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பது தான். மற்றவர்களின் தனித்தன்மையை நாம் உணர மறுப்பதால் நம் கருத்தை அவர்கள் மீது திணிப்பது நடக்கிறது. இதனால் நம் அமைதி குலைகிறது, அவர்களாகவே வந்து கேட்டால் அன்றி மற்றவர்கள் விஷயத்தில் தலையிட கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

மன்னிப்பும், மறதியும் மனநிம்மதி தரும்

மன்னிக்கவும் மறக்கவும் தெரிந்தாலே மனசஞ்சலம் குறையும். இந்த மனோபாவம் வளர்த்திக்கொள்ள மிகவும் சிரமம். ஆனால்அமைதியான வாழ்க்கைக்கும் உறவுகள் நிலைக்கவும் மிகவும் தேவையான ஒன்று. யாரோ எப்போதோ நம்மை காயப்படுத்தி இருப்பார்கள் அதனை திரும்பத்திரும்ப நினைத்து நம் அமைதியை இழக்க வேண்டாம். முன்னோக்கி செல்வோம் பழைய புண்களைக் கிளறி, தூக்கம் கெட்டு, இரத்த அழுத்தம் அதிகமாகி, குடல் புண்கள் ஏற்பட்டு நம் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளுவானேன்?

பிறரது அங்கீகாரத்திற்க்கு ஏங்காதீர்கள்

அடுத்தவரை மனதார பாராட்டும் மகான்கள் யாரும் நம்மைச் சுற்றி இல்லை. அதையும் மீறி புகழ்கிறார்கள் என்றால் உங்களால் காரியம் நடக்க மட்டுமே. உங்களையும், நீங்கள் செய்த நல்ல காரியங்களையும் மறந்து விடுபவர்கள் தான் புகழ்ந்து காரியம் சாதிப்பவர்கள். உங்கள் கடமையை பலன் பாராமல் நல்ல மனதுடன் செய்யுங்கள். உங்களுக்கான நியாயமான அங்கீகாரம் உறுதியாக எவர்மூலமாவது வந்து சேரும்.

பொறாமை வேண்டாம்

ஒவ்வொருவர்க்கான வாழ்க்கையும் தீர்மானிக்கப்பட்ட ஒன்று தான். ஆகவே நீங்கள் பணக்காரன் ஆகவேண்டும் என்று இருந்தால் கட்டாயம் பணம் உங்களிடம் குவியும், இல்லை என்றால் இல்லை. உங்கள் உழைப்புக்கான பலன் உங்களை வந்தடையும். அடுத்தவர் வளர்ச்சியில் பொறாமை படுவது மகாமட்டமான எண்ணம். உங்கள்மன அமைதிதான் குலையும்.

சூழ்நிலைக்கு ஏற்ப மாறுங்கள்

சூழலுக்கு ஏற்ப சிந்தித்து செயல்பட வேண்டும். நாணல் போல வளைந்து நெளிந்து தான் வாழ்ந்தாக வேண்டும். நேர்மையும் சுயமரியாதையும் காக்கப்பட வேண்டும்.

மாற்ற இயலாத விஷயங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்

நம் அன்றாட வாழ்வில் நடக்கும் பல விஷயங்கள் நம் கட்டுப் பாட்டில் இல்லாதவை. கஷ்டங்களை பொறுமையுடன் எதிர்கொள்ளுவதால் மன உறுதியும் எந்தவிதமான சூழ்நிலையிலும் நிதானம் தவறாமல் நடந்து கொள்ளும் பக்குவம் பிறக்கும். இதுவே ஆகச்சிறந்த வாழ்க்கை பாடம்.


Thanking God, the universe, spirit or whoever you consider your life source, for your blessings, unlocks the door to true happiness. Our thoughts and our words carry so much power that we don’t even realize we set the tone for our lives each and every day. Vocalizing your gratitude pulls positive energy back into your space, making things seem, “not so bad after all.” When you wake up in the morning and you feel the sun shining on you, thank God. Be grateful for what you do have. Do what you love continuously. Every single day you should be dedicating time to whatever it is that you love. Even if it’s just for a few minutes a day.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.