உங்க சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சம் இருக்கு?

ஈஸியா தெரிஞ்சுக்க ஒரு கப் தண்ணீர் போதும்.

ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு விறகு அடுப்பில் சமையல் நடக்கும். இப்போது எரிவாயு உருளை என சொல்லப்படும் கேஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளே இல்லை. அதே நேரம் பலரும் இரு கேஸ் சிலிண்டர் வைத்திருப்பார்கள். ஒன்று காலியானதும், அதை ஒதுக்கி விட்டு மற்றொன்றை எடுத்து சமைக்கத் துவங்கி விடுவார்கள். இந்த இடைவேளையிலேயே புதிய கேஸ்க்கு புக் செய்து விடுவார்கள்.

ஆனால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடான நேரத்திலும், ஒரு சிலிண்டர் மட்டுமே வைத்துள்ள வீடுகளிலும் இது மிகவும் சிக்கலை ஏற்படுத்திவிடும். இதை மிக எளிய முறையில் சமாளித்து விடலாம். சில சூட்சமங்கள் மூலம் நம் வீட்டில் எரிவாயு உருளையில் கேஸ் எவ்வளவு மிச்சம் இருக்கிறது என சுலபமாக தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம் இப்பிரச்னையில் இருந்தும் தப்பிக்கலாம்.

பொதுவாகவே சிலிண்டர் வாங்கும்போது அதில் எண் இருக்கும். அதிலும் ஏ, பி, சி, டி என போட்டு எண் போடப்பட்டு இருக்கும். இந்த ஏ என்பது ஜனவரி முதல் மார்ச் வரை என்பதைக் குறிக்கும். அதேபோல் பி, சி, டி ஆகியவை அடுத்தடுத்த மூன்று மாதங்களை குறிப்பவை. 

இந்த ஆங்கில எழுத்தின் கூடவே ஒரு எண் இருக்கும். அது வருடத்தைக் குறைப்பது. அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் வருட, மாதத்தோடு அந்த சிலிண்டரின் கால அளவு முடிகிறது என்பது இதன் பொருள். அதற்கு மேல் அதை பயன்படுத்தினால் வெடிக்கும் அபாயமும் உண்டு.

இனி விசயத்துக்கு வருவோம். உங்கள் கேஸில் எவ்வளவு மிச்சம் இருக்கிறது என தெரிந்துகொள்ள வேண்டுமா? இனி இதை மட்டும் செய்யுங்க.

முதலில் ஒரு கப்பில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் உங்களின் விரலை நனைத்து அந்த விரலால் சிலிண்டரின் மேல் கோடுபோட வேண்டும். நீளவாக்கில் சிலிண்டர் முழுமைக்கும் அந்த கோடு இட வேண்டும். இப்படிப் போடும் போது காலியாக இருக்கும் சிலிண்டர் பகுதியில் அந்த ஈரக்கோடு விரைவில் காய்ந்து விடும். அதேநேரம் கேஸ் இருக்கும் பகுதியில் இந்த கோடு காய நீண்ட நேரம் ஆகும். கொஞ்சம் பொறுமையாக கண்களை சுழல விட்டுப் பாருங்கள். விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கும்.

நன்றி

Sridhar samy


The standard cooking gas cylinder in India has a nett weight of 14.2kg ± 150 grams. The empty cylinders have a tare weight of approximately 15.3kg. The tare weight will vary from cylinder to cylinder, as the result of manufacturing variances. The exact tare weight is printed on the individual cylinders. The empty cylinders have a tare weight of approximately 15.3kg. The tare weight will vary from cylinder to cylinder, as the result of manufacturing variances. The exact tare weight is printed on the individual cylinders. That means that the gross weight of a full 14.2kg cylinder is approximately 29.5kg. As most people would vary the settings, depending on the temperature, the gas bottle will last some duration between 147 and 367 hours. So, if you use your heater for four hours every evening, you would expect your gas bottle to last anywhere from 37 to 92 days.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.