தியானம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை!

ஆன்மிகம் மட்டும் அல்லாமல் மனம் சார்ந்த பிரச்சினைகள் தீரவும், மனதை ஒருமுகப்படுத்தும் நோக்கில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்பாடே தியானம். தியானம் செய்து பக்குவப்பட்ட உள்ளங்கள்  உலக அபிலாஷைகளுக்கு சலனப்படாமல் தெளிந்த மனதுடன் வாழ்க்கையை வாழ்வார்கள் என்பது பொதுவான கருத்து.

தியானம் என்பது இறைவனை பார்ப்பதற்காக என்று சொல்லப்பட்டாலும் கூட,  சில உலக தேவைகள் கூட கூட்டு தியானங்களால் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்று எண்ணம் தியானம் செய்பவர்களுக்கு உண்டு. இதை நன்றாக அறிந்து கொண்ட நமது முன்னோர்கள், ஆன்மிகப் பெரியவர்கள் அதற்கான தீர்வையும்  தந்திருக்கிறார்கள்.

தியானம் செய்ய ஏற்ற சூழல்

தியானம் செய்ய சூழல் என்பது மிகவும் அவசியம். அமைதியான இடத்தில் எளிதாக மனம் ஒருமுகப்படும். தினசரி ஒரே இடத்தில் அமர்ந்து தியானம் செய்வது கூட நல்ல அணுகுமுறை. மெல்லிய இசையும், ஒளியும் மனதை சாந்தப்படுத்தும். “ஓம் ” போன்ற ஓம்காரம், வீணை போன்ற கம்பி வாத்திய இசைப்பதிவு ஒலிக்க தியானப் பயிற்சி செய்வது சொர்க்கத்தில் மிதப்பது போல இருக்கும்.

தியானம் செய்ய ஏற்ற திசை

  • மற்றவர்களை கவர வேண்டும் என்றால், கிழக்கு திசை நோக்கி அமரவேண்டும். 
  • வியாதிகள் தீர, தென்கிழக்கு திசை நோக்கி அமர வேண்டும்.
  • அமானுஷ்யமான தொல்லைகள் நீங்க தெற்கு திசை நோக்கி அமர வேண்டும்.
  • எதிரிகளின் தொல்லைகள் விலக தென்மேற்கு திசை நோக்கி அமர வேண்டும்.
  • செல்வச் செழிப்பு ஏற்பட மேற்கு திசைநோக்கி அமர வேண்டும்.
  • எடுத்தக் காரியங்களில் வெற்றி பெற வடமேற்கு திசை நோக்கி அமர வேண்டும்.
  • மனம் அமைதியடைந்து, இறைவன் மீது நாட்டம் அதிகரிக்க வடகிழக்கு திசைநோக்கி அமர வேண்டும்.
  • விரைவில் முக்தியடைய யோகிகள் வடக்கு திசைநோக்கியும் அமர்ந்து தியானம் செய்வார்கள் என்று கூறுகின்றனர். 
  • ஆன்மிகம் என்பதை தாண்டி மனதை கட்டுப்படுத்தும் எளிய வழி என்பதால் அனைவரும் தியானம் செய்ய ஆரம்பிக்கலாம்.

In Buddhist philosophy, the ultimate benefit of meditation is liberation of the mind from attachment to things it cannot control, such as external circumstances or strong internal emotions. The liberated or “enlightened” practitioner no longer needlessly follows desires or clings to experiences, but instead maintains a calm mind and sense of inner harmony. If relaxation is not the goal of meditation, it is often a result. The relaxation response is “an opposite, involuntary response that causes a reduction in the activity of the sympathetic nervous system.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.