தினமும் இரவு படுக்கும் முன்பு முகத்தின் சருமப்பராமரிப்புக்கு என்ன செய்ய வேண்டும்?

காலை முதல் இரவு வரை வெயில், மழை, பனியினால் முகத்தில் உள்ள சருமத்தில் ஏற்படும் விளைவுகள், சுற்றுச்சூழல் மாசு, மேக்கப் சாதனங்களின் பூச்சு அனைத்தும் ஒரு படலம் போல முகத்தில் படர்ந்திருக்கும். முழுமையான சரும பராமரிப்பு என்பது இரவு உறங்கும் முன் சருமத்திற்கு தரும் கவனிப்பும் சேர்ந்தது.

1. முகத்தை குளிர்ந்த நீரில் நன்கு கழுவவும்

முகத்தில் உள்ள மாசுக்கள், பவுடர், க்ரீம்கள் அனைத்தும் நீங்குமாறு தண்ணீரால் முகம், கழுத்து, காது மடல் என அனைத்து பகுதிகளிலும் கழுவ வேண்டும்.

2. கண்களுக்கு கவனம் செலுத்த வேண்டும்

மொபைல், கம்பியூட்டர் உபயோகித்தல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் கண்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தான் அதிகப்பாதிப்பு இருக்கும் ஏனெனில் கண்கள் சுற்றியுள்ள பகுதிகள் தான் மென்மையாக இருக்கும். கண்களை நீரால் அடித்து கழுவவும்.

3. பால் ஒரு சிறந்த க்ளென்சர்

முகத்தை தண்ணீரால் கழுவியதும், மார்க்கெட்டில் கிடைக்கும் க்ளென்சிங் க்ரீம்கள் அல்லது வீட்டில் இருக்கும் குளிர்ந்த பாலை ஒரு காட்டன் உருண்டையால் முகம், கழுத்து முழுவதும் தடவி சில நிமிடங்கள் கழித்து காட்டன் உருண்டைகளால் துடைத்து எடுக்கவும். அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கி விடும்.

4. மாய்ச்சரைசர்

நல்ல தரமான மாய்ச்சரைசர் அல்லது தேங்காய் எண்ணெய், ரோஸ் ஆயில் கொண்டு முகம் முழுவதும் தடவி லேசாக மசாஜ் செய்து பிறகு தண்ணீரால் முகத்தை கழுவவும்.

5.உதட்டில் வெடிப்பு நீங்கும்

இன்றைய சூழலில் தினசரி லிப்ஸ்டிக் பூசுவது சர்வசாதாரணமாகி விட்டது. வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சில துளிகள் எடுத்து உதடு முழுவதும் தடவி விடவும். தினமும் ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி சருமப் பராமரிப்பு செய்யும் போது முகப்பொலிவு பெறும் அதேசமயம் தோல் சுருக்கங்கள், கரும்புள்ளிகள்  நீங்கி விடும்.


Beautiful and naturally glowing skin isn’t that hard to achieve if you know how to give yourself that much-needed helping hand.Beauty tips heps us to take care of ourself in a natural way. So many videos,in many languages are taken too.Besides, those trips to the salon will be a lot less expensive with these super-simple beauty tricks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.