ஒரு கப் காப்பியின் விலை ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்! ஏன் தெரியுமா?

உலகெங்கும் 124 காபி ரகங்கள் உள்ளன அதில் இரண்டு ரகங்களே மிகவும் பிரபலம் காபி கேனிபரா, காபி அராபிகா. உலகில் 70% காபி அராபிகா தான் விரும்பி பருகுகின்றனர். 20% மக்கள் காபி கேனிபராவை பருகுகின்றனர். உலகின் விலையுயர்ந்த பொருட்களின் பட்டியலில் உள்ள கோபி லுவாங்கி எனும் காபியை பற்றி பார்ப்போம்.

காபி லுவாங்கி காபி சாதாரண காபி தான், அதன் பிரபலத்திற்க்கும் விலைமதிப்புக்கும் காரணம் இந்தோனேசியாவில் பின்பற்றப்படும் அதன் பிரத்யேக செய்முறைகள் தான்.

இந்தோனேஷிய வார்த்தையான “கோபி லுவாக்”, என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? கோபி லுவாக் எனும் civet ஐ நம்பித்தான் இந்த ரக காபியின் சுவையின் ரகசியமே உள்ளது.பீடிகை போதும் நேரிடையாக காபிக்குள் போவோம்.

கோபி லுவாக் வரலாறு
19 ம் நூற்றாண்டில் காபி குடிப்பதோ, உற்பத்தி செய்வதோ இந்தோனேசியாவில் குற்றம் ஏனெனில் அனைத்து காபிரகங்களும் ஐரோப்பியர்களின் காபி போதைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டதால் உள்ளூர் மக்களுக்கு தடைசெய்யப்பட்டது.

அதற்கும் மாற்றுவழி கிடைத்தது.நம்ம ஊரு புனுகு பூனை போல அங்கு லுவாக் வகைப்பூனைகள் காபி பழங்களை விரும்பி உண்டது. காபி பழத்தின் கொட்டைகள் பூனையின் கழிவுகளில் வெளியேறியது. இதைக்கண்ட உள்ளூர்வாசிகள் காபியின் மோகத்தில் இந்த கொட்டைகளை கழுவி சுத்தமாக்கி வழக்கம் போல காபி செய்து குடித்தப்போது அதிஅற்புதமான சுவையால் உள்ளூர்வாசிகள் civet – பூனையின் கழிவுகளை சேகரிக்க ஆரம்பித்தார்கள். இதைக்கண்ட பிரிட்டிஷ் மக்கள் அதற்கும் அடிமையாகிப்போனார்கள்.

கோபி லுவாக் தயாரிப்பு

பூனையின் கழிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட காபிக்கொட்டைகளை தண்ணீரால் கழுவி சுத்தமாக்கி, காயவைத்து, மரத்தாலான சிறு உரலில் இடிக்கும் போது, அதன் மீது உள்ள மெல்லிய உறை வெளியேறுகிறது. பிறகு அதனை வறுக்கிறார்கள்.

கோபி லுவாக் காபியின் சிறப்பு
இந்த காபியின் அசல் சுவை தெரியவேண்டும் என்றால், வழக்கமாக காபியில் சேர்த்தும் பால், சர்க்கரை, க்ரீம் சேர்க்காமல் குடிக்க வேண்டும்.

ஒரு கிலோ கோபி லுவாக் காப்பியின் விலை கிட்டத்தட்ட ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்.

இந்தியாவில் கோபி லுவாக்
இந்தியாவின் காபி  பிரதேசமான கூர்க்கில் கோபி லுவாக் தயாரிக்கிறார்கள். புனுகு பூனையை காபித்தோட்டத்தில் வளர்த்துகிறார்கள். ஆகவே இந்தியாவில் கிடைக்கும் கோபி லுவாக்கின் விலை கிலோ எட்டாயிரம் ரூபாய். உற்பத்தி பரவலாகும் போது விலை இன்னும் குறையலாம்.

கொச்சியில் கோபி லுவாக்
கொச்சியில் கோபி லுவாக் காபி கடை ஆரம்பித்து உள்ளார்கள்.என்ன ஒரு கப் காப்பியின் விலை சுமார் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்!!!!


Kopi Luwak Coffee or civet coffee is the most expensive coffee in the world because of its uncommon method of producing from the coffee beans which have been digested by a certain Indonesian cat called then palm civet or also civet cat. This is why kopi luwak is also called cat poop coffee or civet cat coffee. It is hygienic and sanitary due to the washing, roasting and brewing of the beans. Drinking kopi luwak coffee is as safe as drinking any other coffee. A cafe in Kochi city “Kafe KopiLuwak” serves this expensive coffee. Kopi Luwak is produced in Coorg, Southwestern Karnataka and it costs 8000 rupees in India.coffee. Kopi Luwak is produced in Coorg, Southwestern Karnataka and it costs 8000 rupees in India.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.