அவல் இணை உணவாக குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?

தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தைகளுக்கு ஆறுமாதங்கள் வயது ஆனவுடன் இணை உணவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும் என்பது பெரும் டென்ஷன் தரும் விஷயம். சத்துள்ளதாக அதேசமயம் குழந்தை விரும்பி உண்ண வேண்டும் என்பது தான் தாயின் நோக்கமாக இருக்கும். அந்த கவலையை போக்கும் வகையில் தான் அவல் கொண்டு தயாரிக்கும் அவல் கூழ் எப்படி செய்வது என்று பார்ப்போம். 

அவல் ஏன் குழந்தைகளுக்கு நல்லது

நெல்லை ஊறவைத்து, இடித்து, அதிலிருந்து உமியை நீக்கி அவலாக தயாரிக்கிறார்கள். கைக்குத்தல் முறையில் தயாரிக்கப்படும் அவலில் ஊட்டச்சத்துகள் ஏராளம். வெள்ளை மற்றும் சிவப்பு அவல் தேர்ந்தெடுக்கவும். சிவப்பு மட்டைரக அரிசியில் கிடைக்கும் அவல் மிகவும் நல்லது. ஆந்தோசயனின் (Anthocyanin) என்னும் நிறமி அவலின் சிவப்பு நிறத்துக்குக் காரணம். சிவப்பு அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வெள்ளை அவலைவிட சிவப்பு அவல் நல்லது. இதற்குக் காரணம், பட்டை தீட்டப்படாத சிவப்பரிசியில் இருந்து இது பெறப்படுவது தான். வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும்.நன்கு பசி தாங்கும் குழந்தைகளுக்கு.

அவல் கூழ் பொடி செய்முறை

 • அவல் – 1 கப்
 • பாதாம் பருப்பு – 10
 • முந்திரி பருப்பு – 10
 • பொட்டுக்கடலை – 1 கரண்டி 
 • வெறும் வாணலியில் பாதாம் மற்றும் முந்திரி சேர்த்து கருகாமல் வறுத்து எடுக்கவும்.
 • பொட்டுக்கடலையை லேசாக வறுத்து எடுக்கவும்.
 • அதே வாணலியில் அவல் கரகரப்பாக ஆகும் வரை வறுக்கவும்.
 • வறுத்த பருப்புகளை மிக்ஸியில் அரைத்து தனியாக வைக்கவும்.
 • அவல், பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
 • அரைத்த பவுடர்களை ஒன்றாக கலந்து , சல்லடையில் சலித்து எடுக்கவும்.
 • சலித்த பொடியை ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

அவல் கூழ் செய்முறை

அவல் கூழ் பொடி ஒரு டேபிள்ஸ்பூன் அளவில் எடுத்துக் கொண்டு, அதற்கு அளவான தண்ணீரில் கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும். இந்த கலவையை மெல்லிய தீயில் அடுப்பில் வைத்து கூழ் பதம் வரும் வரை கிளறவும். இனிப்பு சுவைக்காக பேரிச்சை சிரப் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கிளறவும். இறக்கும் போது கால் ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ளவும். ஏழு மாதத்தில் இருந்து எத்தனை வயது வரை வேண்டுமானாலும் கொடுக்கலாம். குழந்தையின் வயதுக்கு ஏற்ப அளவுகளை கூட்டிக்கொள்ளவும்.


Flattened Rice, commonly known as chura, is rice which is flattened into flat, light, dry flakes originating from the Indian Subcontinent. These flakes of rice swell when added to liquid, whether hot or cold, as they absorb water, milk or any other liquids. The thickness of the flakes varies between almost translucently thin (the more expensive varieties) to nearly four times thinner than a normal rice grain.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.