குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதால் பக்கவிளைவுகள் வருமா?

சுத்தமான தேன் என்றால் பிறந்த குழந்தைக்கு கூட கொடுக்கலாம். இருப்பினும் தேனின் நம்பகத்தன்மை உறுதிபடுத்த இயலாது என்பதால், ஆறு மாதங்கள் கழித்து பயமின்றி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆறுமாதங்களுக்குள் தேவையிருப்பின் மருந்துகள் உடன் தேன்கலந்து கொடுக்க காதி போன்ற நயமான கடைகளில் வாங்கி பயன்படுத்துங்கள். தேனினை எப்படி எல்லாம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்று பார்ப்போம்.

 • இளஞ்சூடான நீரில் தேன் கலந்து குழந்தை தூங்குவதற்கு முன்பு கொடுத்தால் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்தால் நிற்கும்.
 • கேரட்டை நன்றாக அரைத்து சாறாக்கி, வடிகட்டி அதனுடன் தேன் கலந்து தினமும் குழந்தைக்கு கொடுக்கலாம்.
 • தேங்காய் தண்ணீரில் சிறிதளவு தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வயிற்றில் உள்ள கிருமித்தொல்லை நீங்கும்.
 • நேந்திரம் பழத்தை வேகவைத்து மசித்து அதில் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் பலம் பெறும்.
 • சில குழந்தைகளுக்கு பல் முளைக்கும்போது வரும் வலியைப்போக்க பல் முளைக்கும் பகுதியான ஈறில் தேனைத் தடவினால் வலி குறையும்.
 • குழந்தைகளுக்கு மருந்து கொடுத்தவுடன் அல்லது மருந்துடன் தேன் கொடுத்தால் மருந்தின் கசப்புத்தன்மை நீங்குவதுடன் எளிதில் மருந்துகள் ஜீரணிக்க உதவும்.
 • குழந்தைகளுக்கு வாயில், வயிற்றில் மற்றும் தொண்டையில் புண் ஏற்பட்டால்  வெங்காயச்சாற்றுடன் வாயில் தேனைத் தடவினால் வாய்ப் புண்கள் மறையும்.
 • வசம்பைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து நாவில் தடவினால் வாந்தி தீரும்.
 • துளசி சாற்றில் சிறிது நல்ல சுத்தமான தேனைக் கலந்து வைத்துக் கொண்டு ¼  தேக்கரண்டி வீதம் ½ மணிக்கு ஒரு முறை என மூன்று வேளை  கொடுத்து வந்தால் குழந்தைகளின் வாந்தி நின்றுவிடும்.
 • தும்பை இலைச்சாறு இரண்டு துளி எடுத்து 5 துளி தேனில் கலந்து கொடுத்தால் கைக்குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கோர்வை, சளி நீங்கிவிடும்.
 • கற்பூரவள்ளி, வெற்றிலை இரண்டையும் சாறெடுத்து தேனுடன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை படிப்படியாக நீங்கும்.

சுடுநீரில் தேன் கலந்து கொடுக்க கூடாது என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


The nutritional value of honey is high. Honey which is extracted from nectar is one of nature’s best gift and can enhance a child’s health in many amazing ways. Honey has quite a few minerals that are extremely helpful in children. It can be used in various recipes or can also be given to children directly. Honey for kids cough is something that is followed in many Indian homes as it works wonders. Honey has many amazing healing properties like it helps in a cough and cold, blood sugar and even helps in healing wounds and burns.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.