உங்கள் செல்ல குழந்தைக்கு பனானா பவுடர் (Healthy Banana Powder Recipe)

ஆறுமாதம் வரை தாய்பால் மட்டுமே பருகி வரும் குழந்தைகளுக்கு, மெல்ல மெல்ல பழுத்த வாழைப் பழம், ராகிக்கூழ், வேகவைத்து மசித்த காய்கறிகள் என பழக்கப்படுத்தியிருப்பர், இதன் அடுத்த கட்டமாக சிறிது கட்டியான திட உணவை ஆரம்பிக்கலாம்.

நவதானிய கஞ்சி, ராகி, கோதுமை கூழ், பிஸ்கட், என்பதை தாண்டி, வித்யாசமான, சுவையான அதேசமயம் ஆரோக்கியமான குழந்தைகள் உணவு என்றதும் நம் நினைவுக்கு வருவது நேந்திரம் பழப்பொடி.

இது ஏதோ புதுவித உணவன்று, கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் பரவலாக குழந்தைகள் உணவாக பண்டைக்காலம் முதல் இன்று வரை அளித்து வருகின்றனர். இப்போது புஷ்டியான கேரளக் குழந்தைகளின் முகங்கள் நினைவுக்கு வருகிறதா? அவர்களின் ஆரோக்கியத்தின் ரகசியம் நேந்திரம் பழமே!

நேந்திரம் பழம் விளைச்சல் கேரளாவிலும் அதன் எல்லோயோரங்களிலும் அதிகம் என்பதால் அவர்களது உணவில் இதற்கு முக்கிய இடம். பிஞ்சுக்குழந்தைகளுக்கு நேந்திரம் பழம் செரிமானம் ஆகாது என்பதால், அதனை பொடியாக்கி தினமும் ஒரு வேளை உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

நன்கு விளைந்த நேந்திரம் வாழைக்காயை தோலுரித்து, இரு பக்கமும் காம்புகளை வெட்டி, காய்கறி துருவலில் துருவிக்கொள்ளவும். இந்த துருவல்களை வெள்ளை துணியில் பரப்பி, தூசு படாதவாறு வலை ஏதாவது கொண்டு மூடி மூன்று முதல் நான்கு நாட்கள் வெயிலில் காய வைக்கவும்.

ஈரப்பதம் முற்றிலும் வெளியேறி காய்ந்த துருவல்களை மிக்ஸியில் நன்கு பொடியாக்கவும்.பிறகு இதனை சலித்து ஈரமில்லாத, காற்று புகா டப்பாவில் சேமிக்கவும். குழந்தைக்கான உணவு என்பதால் ஒவ்வொரு நிலையிலும் சுகாதாரமான முறையில் செய்யவும். நேரம் இல்லாதவர்களுக்கு ரெடிமேட் பனானா பவுடர் இருக்க கவலை ஏன்?

நேந்திரம் பழப்பொடி கொண்டு குழந்தைகளுக்கு திட உணவு செய்யும் போது பாத்திரங்களை நன்கு கழுவி சுத்தப்படுத்தவும். ஒரு டேபிள் ஸ்பூன் நேந்திரம் பழப்பொடி உடன் நூறு மில்லி பால் அல்லது தண்ணீரில் கலந்து, அடுப்பில் வைத்து கிளறவும். பாதி வெந்து வரும் போது கருப்பட்டி அல்லது சர்க்கரை சிறிது சேர்த்து கூழை விட கெட்டியாக வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை:

1. அடிப்பிடிக்காமல், அளவான இனிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

2. புதிதாக ஒரு உணவை அறிமுகப்படுத்தும் போது மதிய நேரத்தில் அறிமுகம் செய்யவும்.அப்போது தான் உணவு ஒவ்வாமை ஏற்பட்டால் தெரிந்து கொள்ளவும், மருத்துவம் பார்க்கவும் எளிது.

3. முதல் முறையில் அலர்ஜி ஏற்பட்டால் மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு பிறகு மீண்டும் இந்த உணவை அறிமுகப்படுத்தலாம்.

நேந்திரம் பழப்பொடி யில் இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலும்பு, நரம்பு வளர்ச்சிக்கு தேவையான தாதுக்கள் உள்ளது. விட்டமின் ஏ மற்றும் விட்டமின் பி 6 உள்ளது. புற்றுநோயைத் தடுக்கும் ஆண்டி ஆக்சிடெண்ட்கள் உள்ளது. இதன் ஆன்டாசிட் – antacid குணத்தால் வயிற்றில் உள்ள அல்சர்களை ஆற்றும். அதிகப்படியான நார்ச்சத்தால் மலச்சிக்கலை போக்கும்.

குழந்தைகளுக்கு மட்டும் அல்ல இதன் குறைந்த க்ளைசிமிக் அளவால் நீரிழிவு நோயாளிகள் கூட கஞ்சியாக பருகலாம். க்ளுட்டனால் அலர்ஜி இருப்பவர்களுக்கு சிறந்த மாற்று உணவு. உடல் எடை குறைக்க பேலியோ டயட் தொடர்பவர்களுக்கு நேந்திரம் பழப்பொடி சிறந்த உணவு. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை என்பதே இயற்கையாக விளையும் காய்கனிகளை அதன் சத்து குறையாமல் பயன்படுத்துவது தான்.


How to make banana powder for kids? This Kerala style banana powder is easy to make and healthy for babies. Health benefits of banana is completely present in the banana powder when you feed it to your baby. This powder contains vitamin A and vitamin B6 part from fiber content that helps to relieve constipation in kids. Get benefited from this banana powder a regular food to your child.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.