இணை உணவை பாப்பாவுக்கு எப்படி பழக்கப்படுத்துவது?

பால், தண்ணீர், ஜீஸ் என்று திரவ உணவு மட்டுமே குடித்துக் கொண்டிருந்த குழந்தைக்கு கொஞ்சம், கொஞ்சமாக திட உணவை சாப்பிடப் பழக்கப்படுத்த வேண்டும். குழந்தையின் நாக்கு பால் குடிக்கும்போது ஒரு விதமாகவும், திட உணவு சாப்பிடும் போது ஒரு விதமாகவும் அசைய வேண்டி இருக்கிறது. சரியாக மென்று விழுங்க கற்றுக்கொள்ளும் வரை குழந்தைக்கு ஊட்டும் உணவை துப்பவும் வாந்தி எடுக்கவும் செய்கிறது.

 

அதேசமயம் இணை உணவை பாலில் கலந்து கொடுக்கும்போது குழந்தை எளிதில் சாப்பிட்டு விடுகிறது, காரணம் பாலை ஏற்கெனவே சுவைத்து இருப்பதால் விரும்பி பருகும். ஒரேநாளில் திட உணவை சாப்பிட வைக்க முடியாது. அதனல் முதலில் திரவமாகவும் திடமாகவும் இல்லாமல் கூழ் பதத்தில் இணை உணவைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும்.

வீட்டில் உள்ள பொருட்களை வைத்துக்கொண்டு மிக எளிதாக செலவில்லாமல் இணை உணவு வகைகளைத் தயாரித்துக் கொடுக்கலாம். 

இணை உணவு எப்படி இருக்க வேண்டும்

முதலில் நம்முடைய முக்கிய உணவான அரிசியில் இருந்து தயாரிக்கப்படும்  கூழ் கொடுக்கலாம். பிறகு கேழ்வரகுக்கூழ், கிச்சடி, ஆவியில் வேக வைத்த உணவுகள், வேக வைத்த காய்கறிகள், பழங்கள், என ஒவ்வொரு வகையாக, பகலில் மட்டுமே குழந்தைக்கு அறிமுகப்படுத்தவேண்டும்.  

தவிர்க்க வேண்டியவை

எக்காரணம் கொண்டும் திட உணவுகளை  ஃபீடிங் பாட்டிலில் போட்டு கொடுக்கக் கூடாது. எப்போதும் ஒரு நேரத்தில் ஒரு உணவை மட்டும்தான் அறிமுகப்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் ஒரு தானியத்தை மட்டும் உபயோகிக்கவும். எட்டு மாதங்களுக்கு பிறகு பலவகை தானியங்களை உபயோகப் படுத்தலாம். 

வாரம் ஒரு உணவு வகை என்ற அடிப்படையில் அறிமுகப்படுத்த வேண்டும். திட உணவுகளை ஏற்றுக் கொள்ளும் வரை  குழந்தைகள் உணவைத் துப்பும், வாந்தி எடுக்கும், குழந்தை சாப்பிட ஆரம்பிக்கும் வரை தாய் முயற்சி செய்ய வேண்டும். தாய் பொறுமையாக முயற்சித்தால் சில நாட்களில் சாப்பிடக் கற்றுக்கொண்டு விடும். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு ஒரு வேளை அல்லது இரண்டு வேளை கொடுத்தால் போதும். 


Typically, a six-month-old baby is still primarily breastfed or formula fed. Besides this, solid food can be introduced at one primary meal of the day, preferably breakfast or lunch. Introduce only one food and observe the baby by continuously feeding the same food for at least three days. If the baby responds well and does not show any signs of allergy, then you can try other food varieties. An allergic reaction to any food in the form of diarrhea, vomiting, rashes, constipation or pain in the stomach can be a cause for concern. If there is an allergic reaction, immediately stop the food that you have been giving the baby. If the allergic reaction is life-threatening, seek medical assistance immediately. Avoid the allergy-causing food and retry it after a few months.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.