இயற்கையோடு இணைந்த குழந்தை வளர்ப்பு ஆரோக்கியம் தரும்!!!

முழுக்க முழுக்க ஆங்கில மருந்துகளை நம்பாமல், எளிய பிரச்சினைகளை கைவைத்தியம் மூலம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு மருந்துகளை செய்து கொடுக்கலாம். எந்தவித பக்கவிளைவுகள் இல்லாத குறிப்புகள் என்பதால் தைரியமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். முழுக்க முழுக்க கைவைத்திய குறிப்புகளை நம்பாமல் அவசியம் என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைகளுக்கான ஆரோக்கிய குறிப்புகளைப் பார்ப்போம்.

  • குழந்தைகள் கண் விழித்தவுடன் ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு தேவையான என்சைம்கள் நிறைந்தது.
  • சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பஈர்க்குத்துளி, அரை மிளகு, ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வடிக்கட்டி குடிக்க கொடுத்தால் வாந்தி நின்றுவிடும்.
  • நாட்டு மருந்துக் கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதனை உரசி குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் பருகும்.
  • ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் காட்டி வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தையின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்.
  • குழந்தை மலங்கழிக்க  கஷ்டப்பட்டால், முதலில் ஒரு சங்கு வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் மலம் கழிக்க வில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் மலம் கழிக்கும்.
  • பிறந்த குழந்தைக்கு தலைக்கு ஊற்றியதும், நாட்டு மருந்து கடைகளில் கஸ்தூரி மாத்திரை என்று கிடைக்கும். கால் கஸ்தூரி மாத்திரையை தாய்ப்பாலில் கரைத்து ஊற்றினால் சளிப்பிடிக்காது. ஒவ்வொரு மாதமும்  கால், கால் மாத்திரையாக அளவைக் கூட்டிக் கொள்ளலாம்.
  • ஒரு வயதுக்கு மேல் துளசி, கற்பூரவல்லி இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொடுத்தால் சளிப் பிடிக்காது.
  • தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். 

Children need nature for the healthy development of their senses, and therefore, for learning and creativity. Children use their imagination, which is different to what is possible indoors with man made materials – a stick in nature play can become anything if you allow creativity to flourish and know no bounds!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.