உங்கள் குழந்தை புஷ்டியாக வேண்டுமா? இந்த பொடியை செய்து கொடுங்கள்!

எத்தனை ஆரோக்கியமாக இருந்தாலும் குழந்தைகள் ஒல்லியாக இருந்தால் தாய்மார்கள் மிகவும் கவலைப்படுவார்கள். குண்டாக இருந்தால் தான் ஆரோக்கியம் என்பது எவ்வளவு முட்டாள்தனமோ, வயதுக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல் நல்லதன்று. ஆகவே தாய்மார்களுக்கு பொறுப்பு கூடுகிறது. சராசரி எடையாவது குழந்தை இருக்க வேண்டும், நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் உடல் இயக்கத்திற்கு சரிவிகித உணவு அதிலும் புரதச்சத்து நிறைந்த உணவுகள் உண்பது நல்லது.

புரத உணவுகள்

மீன், முட்டை, இறைச்சி வகைகள், தானியங்கள், பயறு வகைகள், பனீர் போன்ற பால் சார்ந்த பொருட்கள், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற டிரை நட்ஸ்களில் நிரம்பி உள்ளது. குழந்தையின் ஒரு வயதில் இருந்தே மெதுவாக இவற்றின் ருசியை அறிமுகப்படுத்தவேண்டும். வளர்ந்த பிள்ளைகள் பற்றி கவலை இல்லை ஆனால் ஒரு வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு உடல் திடனுக்காக புரதம் நிறைந்த உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டும். டிரை நட் பவுடர் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். 

டிரை நட் பவுடர்

தரமான பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, பிஸ்தா பருப்புகளை ஐ வாங்கவும்.

தேவையான பொருட்கள் 

  • பாதாம் பருப்பு – 100 கிராம்
  • பிஸ்தா – 100 கிராம்
  • முந்திரி பருப்பு – 100 கிராம்

செய்முறை

  • வெறும் வாணலியை அடுப்பில் வைத்து, பாதாம் பருப்பை போட்டு இளம்தீயில் வறுக்கவும். மெல்லிய தீயில் என்றால் தான் நன்கு வறுபடும் இல்லையெனில் பருப்பு வெளியே கருகி இருக்கும் உள்ளே வறுபட்டிருக்காது. இதனைத் தொடர்ந்து முந்திரி பருப்பு, தோல் நீக்கிய பிஸ்தாவையும் வறுத்து எடுக்கவும்.
  • அரைக்கும் போது ஒவ்வொரு பருப்பையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
  • தொடர்ந்து மிக்ஸியை ஒட்டாமல் விட்டு விட்டு அரைக்கவும். உலர்ந்த பருப்பு வகைகள் என்பதால் அதில் உள்ள எண்ணெய் மிக்ஸியின் சூட்டிற்கு வெளிவரும். அதனால் பொடியாக இல்லாமல் பிசுபிசுப்பு உடன் தான் அரைத்த பொடி கிடைக்கும்.
  • மூன்று பொடிகளையும் தனித்தனி டப்பாவில் போட்டு வைக்கவும். ஃப்ரிட்ஜில் கூட வைக்கலாம்.

அளவு

ஒரு வயது முடிந்த குழந்தை என்றால் மூன்று பொடிகளையும் அரை ஸ்பூன் எடுத்து பாலுடன் கலந்து அதில் இட்லி, சப்பாத்தியை ஊற வைத்து மசித்து ஊட்டவும். கூழ், சூப், பாலில் கலந்து கொடுக்கலாம்.


Raisins and dried fruits are sticky and hard to chew, so they can be a choking hazard for babies and young children. But if raisins and dried fruits are cut up into small pieces, most doctors say they’re okay once your baby becomes proficient at chewing other softer, solid foods, after about 9 to 12 months. The non-allergic baby is defined as a baby who has no family history of nut or other food allergies and/or sensitivities. Nuts for the Allergic Baby: Pediatricians recommend introducing nuts at a later age, between 24 and 36 months of age, for the allergic baby. Babies can begin to eat dates when they are around 6 months old or after they have begun eating solid or semi-solid food. Make sure that you do not introduce dates when your baby is just starting on solid foods.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.