குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்களில் 90 சதவிகிதம், குழந்தைகளின் பராமரிப்பில் சரியான கவனம் இல்லாததால் நிகழ்கிறது. புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்குத் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஏனெனில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதால் தான் .

சளி, இருமல்

வைரஸ், பாக்டீரியா போன்ற காற்றில் பரவும் நுண்ணுயிரிகள், காற்று மற்றும் தண்ணீரில் உள்ள மாசு, கைகளைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் உணவு ஊட்டுதல் போன்ற காரணங்களால் தொற்று நோய்கள் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன. இதனால் நுரையீரல் கூட பாதிப்புக்கு உள்ளாகும். விளைவு ஈஸினோபீலியா, ப்ரைமரி காம்ப்ளக்ஸ் போன்ற நோய்கள் வரக்கூடும்.

காய்ச்சல்

இது தொற்று மூலமாகவும் பரவலாம். தொற்று அல்லாமலும் பரவலாம்.  மூக்கடைப்பு மற்றும் மூக்கில் தொடர்ந்து நீர் வடிதல், தொடர்ந்து அழுது கொண்டு இருப்பது போன்ற அறிகுறிகளோடு, காய்ச்சல் அதிகமாகும் போது சில குழந்தைகளுக்கு வலிப்பைக் கூட ஏற்படுத்தும்.

வயிற்றுப் போக்கு

பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு இது. சரியாகக் காய்ச்சி வடிகட்டப்படாத குடிநீர், மூடி வைக்காத உணவு, உணவு நஞ்சாகும் போது  குழந்தைக்குக் கொடுப்பதனாலும், கைகளைக் கழுவாமல் உணவு ஊட்டுவதாலும் குழந்தைக்கு கிருமித் தொற்று ஏற்பட்டு வயிற்றுப் போக்கு ஏற்படும்.

பல் முளைக்கும் போது, தவழ ஆரம்பித்ததும் கூட வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அழுக்குப் படிந்த கை விரல் மற்றும் நகங்களுடன் குழந்தைகள் உணவினை அள்ளி உண்ணும் போது கிருமித் தொற்று ஏற்பட்டு வயிற்றுப் போக்கு ஏற்படும்.

சின்னம்மை

சிறு சிறு கொப்புளங்கள், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஆரம்பிக்கும், கோடை காலங்களில் இது குழந்தைகளை அதிகமாகத் தாக்கும். நோய்த் தொற்று உடையவரின் சுவாசக் காற்றின் மூலம் பரவும் என்பதால் அக்கம் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்குக் காய்ச்சல் இருந்தால் உங்கள் குழந்தையை அவர்கள் அருகாமையில் கொண்டு செல்லாதீர்கள்.

மஞ்சள் காமாலை

பிறந்து 10 முதல் 15  நாட்கள் ஆன  பிறகே குழந்தையின் கல்லீரல் முழுமையான  செயல் திறன் பெறும். எனவே, குழந்தையின் உடலில் ஏற்படும் மஞ்சள்  நிறமாற்றமானது இரண்டு வாரங்களுக்குள் சரியாகிவிடும். ஆனால் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத்  தொடர்ந்தால் அது மஞ்சள் காமாலை நோயாக இருக்கலாம். சுகாதாரம் இல்லாத குடிநீர் மற்றும் உணவு மூலமாகக் குழந்தைகளுக்கு இது பரவும் என்பதால் இது போன்ற விடயங்களில் கவனம் தேவை.

சிறுநீரகப் பிரச்சினை

குழந்தைகள்  சிறுநீர்  மலம் கழித்த பின்னர் சரியாக சுத்தம் செய்யவில்லை எனில், சிறுநீர்த் தாரையில் கிருமித் தொற்று ஏற்படும். இதனால் குழந்தைகளின் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும்.  சிறுநீர் கழிப்பதற்காக உள்ளாடையைக் கழற்றுவதற்கு முன்பாகவே சிறுநீர் கழித்து விடுவார்கள். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தண்ணீர் அதிகமாகக் கொடுக்கச் சொல்வோம்.


Avoid self medication with antibiotics. Though it is highly contagious, the chances of it turning life-threatening are quite rare. We should keep our children away from the viral infections. Just try to protect your kids from any infections.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.