நாப்பதிலும் வாழ்க்கையை ரசிக்கலாம்! பெண்ணே!

இருபது வயதில் கல்லூரியில் ஆரம்பிக்கும் போராட்டம், வேலை, திருமணம், குடும்ப வாழ்க்கை, மகப்பேறு, பிள்ளை வளர்ப்பு என ஓடிக்கொண்டே இருக்கும் வண்டி நாப்பது ப்ளஸ்களில் ஒரு வேகத்தடை மெனோபாஸ் என்ற பெயரில் ஓட்டம் நடையாகிறது.

கண்ணாடியில் உற்றுப்பார்த்தால், உடல் பெருத்து, வெளிறிய நிறம், தடித்த முகம், வெளுத்த முடி…… காலம் விதைத்த கோலங்கள் பறைசாற்றும் எந்த விதமான வாழ்க்கையை அந்தப் பெண் வாழ்ந்திருக்கிறார். கொண்டாடும் கணவனிடம் மகிழ்ச்சியாக வாழும் பெண்கள் விதிவிலக்கு. பெரும்பாலான பெண்களின் நிலைமை தான் கேள்விக்குரியது. கணவருக்கு தான் வேண்டாதவளாகி விடுவோமோ என்ற எண்ணம் தோன்றாத பெண் மனம் இல்லை.

நாற்பது வயதைக் கடந்த பெண்களிடம் ஆற அமர விசாரித்நுப்பாருங்கள். அதிலும் மாதவிடாய் நிற்கும் காலத்தில் தான் கணவர்களின் அலட்சியம் ஆரம்பமாகிறது. இயற்கையின் சதியோ என்னவோ நாற்பது வயதில் தான் கல்லூரி படிப்பில் இருக்கும் பிள்ளை / பெண், கணவரின் பணிச்சுமை, வீட்டுக் கடன், பிள்ளைகளின் படிப்பு, என வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் துவங்கும் நேரம்.வாழ்கை இவ்வாறிருக்க, உடலோடு சேர்த்து மனமும் துவண்டு விடுகிறது.

குடும்பத்தினரின் அலட்சியம்

எந்த பிள்ளைகள் படிப்புக்காக தனது படிப்பு அது தந்த வேலையை தியாகம் செய்தாரோ அந்த பிள்ளைகளே அம்மாவை விட்டு படிப்பு, வேலை என்று தூரமாகி விடுகிறார்கள். கணவரோ தொழில் அல்லது நட்புகள் அல்லது மனம்போன போக்கில் ஒரு புது உறவு என்று தன்னை பிஸியாக வைத்து கொள்கிறார். சுயம் தொலைந்து, தன்னை தேடும் முயற்சியில் இருக்கும் பெண்ணுக்கு யதார்த்தம் புரிந்து தன்னை சுதாரித்து கொள்பவர், இழந்த வாழ்க்கையை மீட்டெடுப்பார்.

சிறகை விரி வானம் வசப்படும்

பிள்ளைகள், கணவர் என்று கண்மூடித்தனமாக அன்பாக இருக்காதீர்கள். அளவுக்கு மிஞ்சிய எதற்குமே மதிப்பில்லை அது அம்மா அன்பாக இருந்தாலும் தான். கவிதை, கதை, ஓவியம், சமையல், பாட்டு, நடனம் என்று உங்களுக்கு பிடித்த விஷயத்தை மீண்டும் கையில் எடுங்கள். இன்றைய இணைய உலகத்தில் கற்றுக்கொள்ள / கற்றுக்கொடுக்க இரண்டுக்குமே வழிகள் உள்ளன.

தொலைத்த நட்புகளுடன் தொடர்பு கொள்ளுங்கள். பிடித்த இசை, ரசித்து ருசிக்கும் உணவு, விரும்பி அணியும் ஆடை அணிகலன்கள் என்று மனதை உற்சாகப்படுத்துங்கள்.

தினசரி நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி அதனுடன் சத்தான உணவுகள், கவலைகளை விற்று மனதிற்கு மகிழ்ச்சியை பெறுங்கள்.

உங்களை நேசிப்பது, உங்களை கவனித்துக் கொள்வது, உங்கள் மகிழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுப்பது சுயநலமல்ல. அது அவசியம் என்பதை உணர்ந்தாலே போதும் வானமும் வசப்படும்.


Many women after 40 experience noticeable hair loss. At this stage, you are more likely to be “settled” everywhere – life, work and family. Forty-year-old female lack mental as well physical strength and feel tired often due to body changes. It’s important to take nutrition supplements as they reach menopause. Women after this age should be taken care by her children, husband and family members.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.