அது ஒரு ஆர்கன்டி புடவைகள் காலம்!!!

பேபி பிங்க், பால் வெள்ளை, எலுமிச்சை மஞ்சள், கத்தரிப்பூ கலர், வானம் நீலம், பாலாடை மஞ்சள் அதான் க்ரீம் கலர். இப்படி கண்களை உறுத்தாத இளம் வண்ணங்களில் வலம் வந்த ஆர்கண்டி புடவைகள். தொண்ணூறுகளில் கூட ஆர்கண்டி புடவைகள் உடன் பெண்கள் வலம் வந்தார்கள். யாராவது ஆர்கண்டி புடவை உடுத்தி இருந்தால் வச்ச கண்ணு வாங்காமல் ரசித்தது உண்டு.

திரைநாயகிகள்

நாதவினோதங்கள் …. பாடலில் ஜெயப்ரதா, ஏதோ கனவுகள் நினைவுகள்…. பாடலில் ஷோபா, சந்தனகாற்றே … பாடலில் மயில், பூ மாலையே …. பாடலில் ரேவதி, இதழோடு இதழாக….ரஞ்சனி….நளினி … பூர்ணிமா என்று எண்பதுகளில் அனைத்து நடிகைகளும் ஆர்கண்டியில் வலம் வந்தனர்.காதோரம் ரோஜாவும் , ரோஸ் நிற புடவையில் ஜெயப்பிரதா கலக்கலான காட்சி விருந்து.

எத்தனை கோடி நிறங்கள்

இன்று போல எண்ணம் போல வண்ணம் இல்லாத காலம். பிரைமரி மற்றும் செகண்டரி நிறங்கள் மட்டுமே கோலோச்சிய காலம் அது. அழகு வண்ணங்களில் ஆர்கண்டி புடவைகள் ! 

அதன் நிறங்கள் தான் இந்த வகை புடவையின் ஸ்பெஷாலிட்டி. இளம்வண்ணங்களில் பிளெயின் புடவைகள் ஒரு வகை என்றால், அதே ரகத்தில் எம்பிராய்டரி பூக்கள் சிரிக்கும் அழகுடன்…அஃப்லிக் வேலைப்பாடுகள், கேரள பாரம்பரிய டிசைன்கள் என்று புதுமையுடன் கைக்கோர்த்து வரும் இளம் பெண்கள்  ரசனைக்கு ஏற்ப நவீன உருவத்தில் உள்ளது.

யாருக்கு அழகு

ஆர்கண்டி புடவையின் அழகு முழுவதும் வெளிப்படுவது உயரமும், ஒல்லியாகவும் இருக்கும் பெண்களுக்கு தான். அவசரமாக வெளியே செல்ல வேண்டும் என்றால்  ஆர்கண்டி புடவையை உடுத்துவது கடினம்.

சிறப்பம்சம்

அயர்ன், கஞ்சி போடவேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஆர்கன்சா என்ற பெயரில் காட்டன், பட்டு மற்றும் பாலியஸ்டர் துணிகளில் புது அவதாரம் எடுத்து உள்ளது.

பாலியஸ்டர் என்பதால் பராமரிப்பு எளிது மற்றும் ஓரளவுக்கு கட்டுப்படியான விலையில் தான் கிடைக்கிறது.


Cotton Organdy is a semi-sheer fabric that is light and crisp. It is used primarily as an underlining in bridal gowns and historical reenactment period garb as well as an interfacing for fine garments. Our cotton organdy is the stiff, not the soft, and is available in this soft white color only. Organza is an elegant and delicate fabric that’s traditionally made of silk for a sheer fabric that’s used in expensive garments, like evening wear and wedding gowns, as well as simple accessories like ribbons and bows. Organza and organdie are similar, only the fibers are different. Both fabrics are transparent, crisp and woven with very fine, tightly twisted yarns in an open, plain weave. Organdy is usually cotton or nylon, while organza can be made of silk, polyester or rayon.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.