பொதுவாக மழைகாலத்தில் வரும் 5 நோய்த்தொற்றுக்கள் என்னென்ன? அதை எப்படி எல்லாம் தவிர்க்கலாம்?

பொதுவாக மழைக்காலங்களில் நோய்த்தொற்றுக்கள் அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளது. அதனால் காலார மற்றும் சலதோஷம் போன்ற தொற்றுக்கள் அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளது.

கோடைக்காலத்தில் கொரோனவைரஸ் குறையும் என்று நினைத்தார்கள், ஆனால் குறையவில்லை, பின்பு மழைக்காலத்தில் கொரோனவைரஸ் அதிகரிக்காலம் என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். COVID- 19 எல்லா சூழல்களிலும் பரவக் கூடியதாக இருக்கிறது. இந்தியாவின் பல பகுதிகளுக்கு முழு பருவமழை வந்துவிட்டதால், மக்கள் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழல் உருவாகும். மழைக்காலங்களில் வரும் நோய்த்தொற்றுக்களை விட இப்பொது புதிதாக COVID-19 எனப்படும் வைரஸ் வந்துள்ளது இதனால் இந்தியா மட்டும்மில்லாமல் உலகநாடுகள் அனைத்தும் பெரும் அவதிகளை அனுபவித்து வருகிறது .

மழைக்காலத்தில் வரும் டெங்கு சிக்கன்குனியா போன்ற பல நோய்கள் கொசுக்களால் பரவும். அது போல மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து எண்ணிக்கைகளை அதிகரிக்கிறது. இந்த கொசுக்கள் மனிதர்களை கடிப்பதால் நமக்கு டெங்கு சிக்கன்குனியா போன்ற நோய்கள் அதிகரித்து வருகிறது .

​ஜலதோஷம் மற்றும் காய்ச்சல்

இந்த மழைக்காலத்தில் அடிக்கடி சலதோஷம் மற்றும் காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. நாம் எவ்வளவு நம்மை பாதுகாத்துக் கொண்டால் கூட இந்த பருவத்தில் ஒரு முறையாவது சலதோஷம் மற்றும் காய்ச்சலால் நோய்வாய்ப்படுகிறோம். இந்த பருவத்தில் காற்றில் அதிகளவு நோய்க்கிருமிகள் இருப்பதே இதற்கு காரணம் ஆகும். மேலும் இந்த சளி மற்றும் காய்ச்சல் பரவக் கூடிய ஒன்றாக உள்ளது. எனவே சளி மற்றும் காய்ச்சல் இருப்பவர்களுடன் நேரடி தொடர்பு கொள்ள வேண்டாம். ஒருவருக்கு சளி பிடித்த சமயங்களில் தனித்தனி துண்டுகள், பாத்திரங்களை பயன்படுத்துங்கள் அதே மாதிரி உங்க கைகளை அடிக்கடி கழுவ மறக்காதீர்கள்.

காலரா

காலரா என்றும் நோய்த்தொற்று நீரால் பரவ கூடிய நோய்.இது மழைக்காலங்களில் மிகவும் அதிகமாக இருக்கும் அதனால் மழைக்காலங்களில் நீங்கள் சுத்தமான தண்ணிரை குடிக்க வேண்டும்.முடித்த அளவு தண்ணிரை சூடாக குடிக்க வேண்டும்.

டைபாய்டு

டைபாய்டு என்பது நீரினால் பரவக்கூடிய நோயாகும். முறையற்ற சுத்திகரிப்பு காரணமாக இது மழைக்காலங்களில் எளிதாக பரவுகிறது. இந்த நோய் காய்ச்சலை ஏற்படுத்தும், சருமத்தை மஞ்சள் நிறமாக மாற்றி கல்லீரலை பாதிக்கும்.டைபாய்டைத் தடுக்க நீங்கள் சுத்தமான தண்ணீரைக் குடிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.வெளியில் இருந்து திறந்த நீர் சார்ந்த பானங்கள் எதையும் அருந்த வேண்டாம். நீங்கள் எங்கு சென்றாலும் உடன் தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.