துளசி ஒரு மருந்து தொழிற்சாலை

துளசி எனும் மகாசக்திமிக்க மூலிகையானது, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நமது சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

இதன் மருத்துவப் பயன்கள் அளப்பரியது. இதனை புரிந்து தான் நமது முன்னோர்கள் வீட்டு  முற்றத்திலே கடவுளின் பெயரால் தொழுது வந்துள்ளார்கள். விஷ்ணுவின் மனைவி துளசி என்று நம்பப்படுகிறது.

துளசியினை துளசி நீர், துளசி டீ என்று பருகலாம்.

துளசியின் மருத்துவ பயன்கள்

 • துளசியில் உள்ள essential oils and phyto nutrients முழுவதும் வைரஸ், மலேரியா, டைபாய்டு காய்ச்சல்களை குணமாக்குகிறது.
 • சுவாசகோளாறுகளான ஆஸ்துமா, சளி, இருமல், தொண்டை வலி தொந்தரவுகள் குறைகிறது.
 • புகைப்பழக்கம், காசநோயால் நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்தால், துளசியால் குணமாகிறது.
 • மலர்மருத்துவத்தில் துளசி முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பிரத்யேக மணம் மனதினை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கிறது.
 • துளசி நீர் வாய் துர்நாற்றத்தை போக்கும்.
 • பல்வலிகளை குணமாக்கும் ஆகவே தான் பெரும்பாலான பற்பசைகளில் துளசி பயன்படுகிறது.
 • துளசி இலைகளைத் தினமும் தின்று வந்தால் செரிமான சக்தியை அதிகரிக்கிறது.
 • வியர்வை நாற்றத்தை தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நல்லது.
 • துளசி சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் முடியின் வேர்க்கால்களில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.
 • சுத்தமான மண்பானைத் தண்ணீரில் துளசி இலைகளை ஊறப்போட்டு அந்தத்  தண்ணீரை குடித்து வந்தால் எந்த நோயும் அண்டாது, கோடை வெயிலுக்கு இதமாக இருக்கும்.
 • துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து வரும் மின் அதிர்வுகள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
 • வெட்டுக் காயங்களுக்குத் துளசி இலையைக்கசக்கி, அதன் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும்.
 • வீடுகளில்  வீட்டை சுற்றிலும் துளசி செடிகளை வளர்த்தால் கொசுக்கள், பூச்சிகள், பாம்புகள் முதலியன வராது.

Tulsi/thulasi is known as basil which is a holy aromatic plant. It can be consumed as leaves, tulsi water or tulsi tea. Tulsi has lot of medicinal benefits and it is a good source of vitamin K. It is used in Siddha and Ayurveda medicines for its benefits. It protects against diabetes, fights acne, helps fight cancer, relieves fever, helps improve respiratory and lung disorders, asthma, provides dental care and oral health, gives relief from heart disorders, stress and anxiety. Tulsi works great on the skin, whether we eat raw leaves or apply a paste on face. When eaten raw, it purifies the blood from toxins and prevents appearance of acne and pimples.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.