பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் மலச்சிக்கல் ஏற்பட இதுதான் காரணம்!

பொதுவாக பெண்கள் பள்ளிக்கு, கல்லூரிக்கு அல்லது வேலைக்கு செல்லும் நாட்களில் மாதவிடாய் என்பது அசௌகரியமான விஷயம்தான். அதிலும், மாதவிடாய் நாட்களில் மலச்சிக்கல் என்பது சற்று எரிச்சலை தரக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிவிடும். இருப்பினும், வயிற்று வலியை போல் அதுவும் சாதாரண நிகழ்வுதான் என்கின்றனர் மருத்துவர்கள்.

மாதவிடாய் நாட்களில் வரும் மலச்சிக்கல் மிகவும் அசௌரியத்தை தந்தாலும், இந்த பிரச்னையை தவிர்க்க இயலாது என்கின்றனர் மருத்துவர்கள்.

Constipation During Periods

இந்த சமயத்தில் வரும் மலச்சிக்கலுக்கு ஹார்மோன் பிரச்சனையே காரணம். பலருக்கு, மாதவிடாய் வருவதற்கு 2-3 நாட்களுக்கு முன்பிலிருந்தே மலச்சிக்கல் பிரச்னை தொடங்கிவிடும். அப்போதிலிருந்தே உடலில் புரோஜெஸ்டெரோன் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கத் துவங்கிவிடும். இந்த ஹார்மோன் உற்பத்தி காரணமாக வயிற்றில் செரிமான ஆற்றல் குறையும். எனவே, மாதவிடாய் நாட்களில் வரும் மலச்சிக்கலுக்கு இதுவும் காரணமாக அமைந்துவிடும் என்கிறனர் மருத்துவர்கள்.

இதற்கான தீர்வு:

எனவே, இந்த பிரச்சனை உள்ளவர்கள் மாதவிடாய் தொடங்குவதற்கு 2-3 நாட்களுக்கு முன்பும், மாதவிடாய் நாட்களிலும் நார்ச்சத்து அதிகம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினசரி உணவுப் பழக்கத்தில் சற்று கூடுதலாக நார்ச்சத்து கொண்ட பழங்கள் , காய்கறிகளை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆப்பில், பீன்ஸ், கீரை வகைகள், தானியங்கள், வாழைப்பழம், கேரட், புரக்கோலி, மக்காசோளம்,சியா விதைகள் போன்ற காய்கறி மற்றும் கீரை வகைகளில் அதிக நார்ச்சத்து உள்ளன. இவைகளை அந்த நாட்களில் எடுத்துக்கொள்வது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உங்களை காக்கும்.

Menstrual Pads in Tamil
Reusable Menstrual Cup for Women – Medium Size | Ultra Soft Period Cup Made With Medical Grade Silicone | No Rashes No Leakage ₹ 299.00

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்வது மட்டுமன்றி அதிகமாக தண்ணீர் அருந்துவதும் மிகவும் நல்லது. அதேபோல் எலுமிச்சையை தண்ணீரில் பிழிந்து குடிப்பதும் மலச்சிக்கலிலிருந்து உங்களை காப்பாற்றும்.

ஒருவேளை இந்த மலச்சிக்கல் தீவிரமாகவோ , பொருத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாகவோ இருந்தால் உடனே மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுதல் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.