உடற்கொழுப்பு, அல்சர், மலச்சிக்கல் மற்றும் கருவளர்ச்சிக்கு – தீர்வு காண உதவும் கிழங்கு!!!

உருளை கிழங்கு போல இல்லாமல் சுற்றிப்படரும் கொடி வகைத் தாவரம்தான் சர்க்கரை வள்ளி கிழங்கு. மார்னிங் க்ளோரி வகை தாவரமான இது பார்க்கவும் அப்படியே இருக்கும்.

கொழுப்பற்ற கிழங்கு : பொதுவாக எல்லா வகை கிழங்குகளில் கொழுப்பு அதிகம் இருக்கும். ஆனால் சர்க்கரை வள்ளி கிழங்கில் கொழுப்பு இல்லை. அதிக நார்சத்து உள்ளது. எனவே ஒன்று சாப்பிட்டாலும் வயிறு நிறையும். பொதுவாக கிழங்கில் கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும். ஆனால் சர்க்கரைவள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இதில் அதிக அளவில்  நார்சத்து நிறைந்துள்ளது. இவை உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கின்றது. மேலும் இரத்த சர்க்கரை அளவும் சீராக வைக்க உதவுகின்றது.

வயிற்று அல்சரை குணமாக்க : சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள அனைத்து விட்டமின்களும், மினரல்களும் வயிற்ற்ல் உண்டாகும் அல்சரை குணப்படுத்துகிறது.

மலச்சிக்கல்லைப் போக்க : மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முக்கியமாக நார்சத்து தேவைப்படும். சர்க்கரைவள்ளி கிழங்கில் தேவையான அளவில் நார்சத்து நிறைந்து குடலின் ஆரோக்கியத்தினை அதிகரிக்கும். மேலும் மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.

கரு உருவாக உதவும் : கர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் சர்க்கரை வள்ளிக் கிழங்கை சாப்பிடுவதால், அதிலுள்ள ஃபோலேட்(Folate) கருவளர்ச்சிக்கு உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.