நிறைமாத கர்ப்பிணிகளே உங்களுக்கு தான் இந்த டெலிவரி பேக் (delivery bag) லிஸ்ட்!

“மழை வருவதும், மழலை பிறப்பதும் மகேசனுக்கு தான் தெரியும்”, என பெரியவர்கள் அடிக்கடி கூறும் சொல்லாடல். என்னதான் நவீன மருத்துவம் கணக்கு போட்டு பிரசவதேதியை குறித்தாலும், குழந்தை பிறப்பு பெரும்பாலும் கணித்த நாளிலே (due date) பிறப்பதில்லை. ஆகவே ஜனனம் நம் கையில் இல்லை.

ஆகச்சிறந்த வரமாக பிள்ளைப்பேறை இறைவன் நமக்கு அளித்ததே பெரும் வரம். அஜாக்கிரதையாலோ, அறியாமையாலோ குழந்தையை இழந்து விடக்கூடாது என்பதில் கர்ப்பிணியும், அவரைச்சேர்ந்தவர்களும் உறுதியாக இருக்க வேண்டும். அதற்கான திட்டமிடலை ஆரம்பித்து விட்டால் கடைசி நேர பரபரப்பின்றி, பொறுமையாக கடினச்சூழலை சமாளிக்கலாம்.

ஒன்பதாம் மாதத்திலே தயாராகுங்கள்!

முழுமையான கர்ப்பகாலம் என்பது 280 நாட்கள் ஆகும். அதாவது 38லிருந்து 40 வாரங்கள் என்றும் கணக்கு வைத்துக்கொள்ளலாம். 36 வது வாரத்திலே பிரசவத்திற்கு தயாராக மனதையும், மருத்துவமனைக்கு செல்வதற்கு தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

டெலிவரி பேக் தயாரா?

முதலில் டெலிவரி பேக்கில் என்னென்ன தேவை என்று பார்ப்போம்.

 • இதுவரை நீங்கள் பரிசோதனை செய்த முடிவுகளின் மருத்துவ ஆவணங்கள் (medical reports, and scan results.)
 • அவசியமான தொலைப்பேசி எண்கள் எழுதிய சிறு டைரியும், அதனுடன் அவசரத்தேவைக்கான பணமும் எடுத்து வைக்கவும்.
 • இன்சூரன்ஸ், மருத்துவமனை ஐடி
 • நாப்கின்கள் அல்லது பழைய சுத்தமான காட்டன் துணிகள்.
 • குழந்தைக்கு தேவையான சுத்தமான காட்டன் துணிகள்.
 • தாய்க்கென்று தனியாக டவல், ஒரு செட் நைட்டி போன்ற எளிதாக அணியும் ஆடை.
 • குழந்தைக்கு டவல்
 • போர்வை
 • புத்தகங்கள்

வெளிநாட்டினர் குழந்தைக்கும் சேர்த்து எல்லாம் வாங்கி தயாராக வைத்து இருப்பார்கள். நாம் கொஞ்சம் சென்டிமென்ட் பேர்வழிகள் ஆகவே மிக அவசியமானதை மட்டும் தயார் செய்து வைப்போம்.

பிரசவத்திற்க்கான அறிகுறிகள்

அம்மா, பாட்டி, மகப்பேறு மருத்துவர் என்னவிதமான அறிவுரைகள் கூறியிருந்தார்களோ அதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பிரசவத்திற்க்கான அறிகுறிகள் பொதுவாக இருந்தாலும் ஒவ்வொரு கர்ப்பிணியின் சூழலும், உடல்நிலையும் வேறு. பிரசவ வலிக்கான அறிகுறிகளை பார்ப்போம்.

 • பனிக்குடம் உடைதல், பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து அம்னியாடிக் திரவம் கொட்டுதல். உடனடியாக மருத்துவமனையை அணுகுங்கள்.
 • கர்ப்பப்பை சுருங்கி விரியும் போது ஏற்படும் வலி. விட்டு விட்டு வலி வரும்.
 • உதிரப் போக்கு.
 • உடல் நடுக்கம்.
 • சிலருக்கு வயிற்று போக்கு, வாந்தி ஏற்படும்.

மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று விடுங்கள்.


Around 34 weeks pregnant, it is important to pack things in a bag that will be needed at hospital. Delivery bag should include front-opening nightdresses or nightie for breastfeeding, comfortable underwear, sanitary pads / napkin / pure cotton clothes / maternity pads, shawl or dressing gown, slippers, breast pads, a feeding cover, insurance card, hospital ID card, medical reports. Normal pregnancy lasts for about 280 days, 36 or 38 to 40 weeks, 9 months. Labour/labor signs include water breaks, lower back pain and cramping, Painful contractions or tightening that may be irregular, bloody vaginal discharge, diarrhea or nausea.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.