கர்ப்பிணி பெண்களுக்கு ஃபோலிக் அமிலம் (Folic Acid) மாத்திரைகள் அவசியமா? அதிர்ச்சி தகவல்!

பெரும்பாலான மகப்பேறு மருத்துவர்கள் கர்ப்பம் உறுதிப்படுத்திய உடனே கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரைக்கும் மஞ்சள் நிற குட்டி மாத்திரை தான் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள்.இந்த போலிக் அமிலம் உடல் வளர்ச்சிக்கு தேவையான விட்டமின். அதனைப்பற்றி பார்ப்போம்!

ஃபோலிக் அமிலம் (Folic Acid)

விட்டமின் பி9 ல் உள்ள நீரில் கரையக்கூடியது தான் போலிக் அமிலம். பச்சை காய்கறிகள் அனைத்திலும் ஃபோலிக் அமிலம் உள்ளது. இயற்கையாக போலிக் அமிலம் உணவுப்பொருட்களில் இருந்தாலும், ஊட்டச்சத்து தரும் மாத்திரைகள் வரிசையில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட மாத்திரைகளும் உண்டு.

வயதுவந்தோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இரத்த சோகை (Anaemia) ஏற்பட முக்கிய காரணம் ஃபோலிக் ஆசிட் பற்றாக்குறை தான்.

போலிக் அமிலம் (Folic Acid) மற்றும் ஃபோலேட் (Folate) இரண்டும் நீரில் கரையும் விட்டமினில் (Water Soluble Vitamins) உருவாகிறது. ஃபோலேட் இயற்கையாக உணவில் கிடைக்கிறது. போலிக் அமிலம் தான் செயற்கையாக உருவாக்கப்படுகிறது. 1998 ல் இருந்து ஃபோலிக் அமிலத்தின் முக்கியத்துவம் தெரிந்ததால் பிரட், பாஸ்டா, பேக்கரி தயாரிப்புகள், குக்கிஸ் என எல்லாவற்றிலும் ஃபோலிக் அமிலம் சேர்த்து தான் தயாரிக்கப்படுகிறது.

ஃபோலேட் உள்ள உணவுகள் (Folate Rich Foods)

பசலை, புரோக்கலி (Brocolli), வெண்டைக்காய், லெட்யூஸ் (Lettuce), வாழைப்பழம், தர்பூசணி, எலுமிச்சை, காளான் (Mushrooms), பீன்ஸ், இறைச்சி, ஆரஞ்சு ஜீஸில் மிதமிஞ்சி காணப்படுகிறது.

பெண்களின் ஆரோக்கியத்திற்கு போலிக் அமிலம்

கர்ப்பிணி பெண்கள் அல்லது கர்ப்பம் தரிக்க விருக்கும் இளம் பெண்கள் அனைவருக்கும் போலிக் அமிலம் அவசியம் தேவை. கரு உருவான மூன்று மாதங்களில் தண்டுவடம் உருவாகும், ஃபோலிக் அமிலம் பற்றாக்குறை காரணமாக தண்டுவடம் உருவாக்குவதில் பிரச்சினை மற்றும் கர்ப்பசிதைவு, எடை குறைவான குழந்தைகள், சிசு மரணம் வரை ஏற்படுகிறது. இவற்றை தடுத்து ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்க வேண்டும் எனில் பெண் குழந்தைகளுக்கு போதிய சத்துக்கள் அதுவும் போலிக் அமிலம் நிறைந்த உணவு கொடுத்து வளர்க்க வேண்டும்.

போலிக் அமிலத்தின் பயன்கள்

பெண்களுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் போலிக் அமிலம் அத்தியாவசியம். குடல் புற்றுநோய், இதய நோய், அல்சீமர் (Alzheimer), நரம்பு தளர்ச்சி, கண்நோய், தசை வலி என உடலின் பெரும்பாலான நோய்களை தடுக்கிறது.

போலிக் ஆசிட் மற்ற விட்டமின் மாத்திரைகளில் கலவையாக தான் தயாரிக்கப்படுகிறது. வாய்வழியாக மாத்திரையாக எடுத்துக் கொள்ளும் போது, ஒரே நாளில் 800mg க்கு மேல் எடுத்தால் வயிறு வலி, வயிற்று போக்கு வலிப்பு என பலவிதமான பக்க விளைவுகள் ஏற்படுகிறது.


If you’re pregnant or trying to become pregnant, then woman body needs enough folic acid (vitamin B9) also known as folate. Folic acid helps prevent neural tube defects (NTDs) – serious birth defects of the spinal cord (such as spina bifida) and the brain (such as anencephaly). You must include more natural food sources of folic acid and folates. Prepare a food list for healthy pregnancy and eat them daily for healthy pregnancy and healthy baby.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.