தாய்பால் அதிகம் சுரக்கச் செய்யும் பூண்டுக்கஞ்சி!

பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்படும் பெரும் கவலையே குழந்தையின் பசி நீக்கும் அளவிற்கு பால் சுரக்க வேண்டும் என்பது தான். பால் சுரப்பு என்பது தாயின் ஆரோக்கியம், மனநிலை, ஹார்மோன்களின் அளவு என பல்வேறு காரணங்கள் அடிப்படை என்றாலும், சரிவிகித உணவு மற்றும் பால் சுரப்பை தூண்டும் உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. நிறைய தண்ணீர், பால், அசைவ உணவுகள் கூட பால்பெருகச்செய்யும். பாரம்பரிய உணவுகளில் ஒன்றான பூண்டுக்கஞ்சி எப்படி செய்வது என்று பார்ப்போம்!

பூண்டு கஞ்சி

 • பச்சரிசி –  1 கைப்பிடி அளவு
 • பாசிப்பருப்பு – 1 கைப்பிடி அளவு
 • நாட்டு மாட்டுப்பால் – 1 கப்
 • மலைப்பூண்டு – 10 பல்
 • பனங்கருப்பட்டி – தேவையான அளவு (அ)
 • கல்உப்பு

செய்முறை

பனங்கருப்பட்டி (அ) உப்பு சேர்த்து குடிக்க, பால் சுரப்பு அதிகமாகும்.

 • பச்சரிசியும் பாசிப்பருப்பையும் களைந்து  கழுவி வைக்கவும்.
 • பாலையும் பூண்டும் அரிசியுடன் சேர்த்து நன்றாக குழையை வேகவைக்கவும்.
 • பேரிச்சை – 2 (கருநிறமுள்ளது)

 மலைப்பூண்டு தோலோடு – 2 பல்

மலைப்பூண்டை கம்பியில் குத்தி அடுப்பில் சுட்டு தோல் நீக்கி அதை பேரிச்சையில் வைத்து காலையிலும் (2) மாலையிலும் (2) இரண்டு சாப்பிடவும்.

கீழ்க்கண்ட பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

 • திப்பிலி – 1 ஸ்பூன்
 • அதிமதுரம்- 4 துண்டு
 • ஏலக்காய் – 6
 • சுக்கு _ சிறு துண்டு
 • பனங்கருப்பட்டி – 6 ஸ்பூன்

மேற்சொன்ன பொருட்களை பொடி செய்து வெதுவெதுப்பான பாலில் 1 ஸ்பூன் கலந்து குடிக்கலாம்.

முருங்கை கீரை, பிஞ்சு நூல்கோல், ராகி, சம்பா அரிசி, பால் குடவாழை அரிசி, சீலா கருவாடு, ஈரல், ஆட்டுக் கால் இந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டாலும் பால் சுரப்பு அதிகமாகும்.


Garlic porridge is one of the best way to boost breast milk for the mother to feed their babies. Rice porridge and veg nombu porridge also very well known by all. Garlic porridge recipe with different stlye like kerala, also be a good recipe for the feeding mother who is in for lactating milk for their babies.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.