பிரசவித்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் பெருக மருந்துக் குழம்பு !

தாய்க்கு கர்ப்பப்பை புண்கள் ஆறி, கர்ப்பப்பை சுருங்கவும், குழந்தைக்கு வயிற்று வலி மற்றும் செரிமான கோளாறுகள் ஏற்படாமல் இருக்க, தாய்பால் சுரக்க என மருந்துக்குழம்பு செய்து தருவார்கள். இதன் செய்முறையும், இதில் சேர்த்து உள்ள பொருட்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியாக தான் இருக்கும். சிறு சிறு மாற்றங்களை தவிர.

மருந்துக் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

 • பூண்டு – 10 பல்
 • சீலா கருவாடு (அ) சீலா மீன் – 3 சின்ன துண்டுகள்
 • நல்லெண்ணெய் – 5 டீஸ்பூன்
 • தேங்காய் துருவல் – அரை மூடி  
 • உப்பு – தேவையான அளவு

மருந்து குழம்புப் பொடி செய்ய தேவையான பொருட்கள்

 • சுக்கு – 100 கிராம்
 • மிளகு – 25 கிராம்
 • திப்பிலி – 10 கிராம்
 • ஓமம் – 50 கிராம்
 • கருஞ்சீரகம் – 25 கிராம்
 • பெருங்காயம் – ஒரு துண்டு
 • கடுகு – 50 கிராம்
 • சீரகம் – 25 கிராம்

மருந்து குழம்புப் பொடி செய்முறை

 • சுக்கை அம்மியில் நன்கு தட்டி, பின்னர் மிக்ஸில் பொடிக்கவும் .
 • மீதமுள்ள பொருட்களையும் லேசாக அம்மியில் தட்டி பின்னர் மிக்ஸியில் சேர்த்துப் பொடியாக அரைத்து கொள்ளவும் . 
 • இந்த மருந்து குழம்பு பொடியை சுத்தமான காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு, தேவைப்படும் போது எடுத்து குழம்பு வைத்துக்கொள்ளலாம்.

குழம்பு செய்முறை

 • கருவாட்டை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து நன்கு கழுவவும். அதில் இருக்கும் அதிக உப்பை இது எடுத்துவிடும். ஊறிய கருவாடு என்பதால் மசாலா எளிதாக உள்ளேறும்.
 • தேங்காயுடன் இரண்டு பூண்டு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். 
 • இத்துடன் 2 கப் தண்ணீரில்2 டேபிள் ஸ்பூன் மருந்து குழம்புப் பொடி சேர்த்துக் கரைக்கவும்.
 • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் மீதமிருக்கும் பூண்டைச் சேர்த்து நன்கு வதக்கி, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் பூண்டு விழுது சேர்க்கவும்.
 • குழம்பு ஓரளவு கொதித்தவுடன் கழுவி வைத்துள்ள கருவாட்டைச் சேர்த்து மசாலா வேகும் வரை கொதிக்க விடவும்.
 • கருவாட்டில் ஏற்கெனவே உப்பு இருக்கும் என்பதால், ருசி பார்த்து தேவையெனில் உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

குறிப்பு

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற தாய்மார்கள் மீன் மற்றும் கருவாடு உணவுகளை முதல் 20 நாட்களுக்குத் தவிர்க்கவும் அல்லது அவரவர் உடல்வாகு மற்றும் குடும்ப பழக்கவழக்கங்களை பொறுத்து உணவுப்பழக்கம் அமைத்து கொள்ளலாம்.மருந்து குழம்பு பொடி, நாட்டுமருந்துக் கடைகளில் ரெடிமேடாகவும் கிடைக்கது. வாங்கி, எளிய முறையில் குழம்பு செய்யலாம். 


Breast-feeding moms need to keep their energy up with nutritious foods, especially immediately after giving birth. Your body goes through massive physical and hormonal changes right after delivery and then must start producing milk for your baby. You don’t need to increase your calorie intake. Breast-feeding increases your calories need by 300 calories per day, about the same as pregnancy.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.