கர்ப்பக் காலத்தில் எடை கூடுவது நல்லதா?

கர்ப்பகாலத்தில் தாயின் எடை கூடுவது என்பது மிக இயல்பான ஒன்று. குழந்தையின் வளர்ச்சிக்காக தாயின் உடலில் ஏற்படும் மாற்றங்களால் எடை கூடுகிறது. அவை:

  • கர்ப்பிணி பெண்ணின் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. பிரசவ காலத்திய இரத்த இழப்பை ஈடுகட்ட, தாயின் உடல் தயார் படுத்திக் கொள்கிறது. கருவுற்றதுமே, கர்ப்பப்பையில் கரு ஊன்றி வளருவதற்கு ஏற்ப இனப்பெருக்க மண்டல உறுப்புகள் வளர்ச்சி அடைய அதிகப்படியாக உற்பத்தியான இரத்தம் உதவுகிறது.
  • ஐம்பது கிராமில் இருந்து 1 கிலோ வரை கர்ப்பப்பையின் எடை அதிகரிக்கிறது. குழந்தைக்கு பாலூட்ட தயார் படுத்துவதற்காக கர்ப்பிணியின் மார்பகங்கள் அளவில் பெரியதாகி, எடை கூடுகிறது.

Healthy Pregnancy Care

  • கர்ப்பப்பையில் பனிக்குட திரவம் – (amniotic fluid) குழந்தைக்காக உருவாகிறது, அதன் பொருட்டு சுமார் 800ml அளவில் இருந்து 2 லிட்டர் வரை தயார் ஆகிறது.
  • இதோடு அல்லாமல் குழந்தையின் எடை என கிட்டத்தட்ட 10 கிலோவுக்கு மேல் தாயின் உடலில் எடை ஏறுகிறது.

கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் விளைவுகள்

 • கருச்சிதைவு
 • கர்ப்பக் கால நீரிழிவு நோய்
 • உயர் இரத்த அழுத்தம் அதன் விளைவாக சிறுநீரக பாதிப்பு
 • இதய கோளாறுகள்
 • சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு குறையும் போது, அறுவைச் சிகிச்சைக்கான காரணங்கள் வலுக்கிறது.

Weight Gain During Pregnancy

தாயின் உடல் எடையால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நேரிடும் பாதிப்பு

 • குழந்தையின் உடல் எடை அதிகரிப்பு
 • குழந்தையின் உடல் எடை அதிகரிப்பால் பிறவிக்குறைபாடுகள் ஏற்படலாம்.
 • குழந்தையின் உடல் எடையால் , வயிற்றில் இருக்கும் சிசுவின் குறைபாடுகளை ஸ்கேன் மூலம் ஆய்வு செய்யும் போது கூட தெளிவாக தெரிவதில்லை.

கர்ப்பக் காலத்தில் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

  • கர்ப்பக் காலத்தில் டயட் இருப்பது என்பது குழந்தையின் உடல்வளர்ச்சியைப் பாதிக்கும். ஆகவே உண்ணும் உணவை தெரிந்து தேர்ந்தெடுக்கவும். உணவில் நிறைய காய்கறிகள், பழங்கள் இருக்குமாறு மாற்றி அமைத்துக் கொள்ளவும். அரிசியை குறைத்து சிறுதானியங்கள் கொண்ட உணவுப் பட்டியல் தயார் செய்து உண்பது நலம்.
  • உணவை ஆறு பிரிவுகளாகப் பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கொள்ளவும்.
 • காலை உணவில் புரோட்டின் நிறைய உள்ளது போல மாற்றி அமைத்துக் கொள்ளவும். முளைகட்டிய பயறு வகைகள் சாலட்டாகவோ, வேக வைத்தோ எடுக்கவும்.பெசரட், அடைத்தோசை சிறப்பு.

கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டியவை

 • டின்னில் அடைத்த உணவுகள், கோலா ….வகை குளிர்ப்பானங்கள்
 • உணவில் சர்க்கரையைக் குறைக்கவும்.
 • கர்ப்பக் கால உடற்பயிற்சிகள்.
 • கர்ப்பிணிகளின் உடல் ஒத்துழைத்து, மருத்துவரும், உடற்பயிற்சி பயிற்சியாளரும் அனுமதித்தால் மட்டும் மிதமான உடற்பயிற்சிகள் செய்யவும்.
 • நடைப்பயிற்சி சாலச்சிறந்தது.
 • யோகப்பயிற்சிகளில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ளவர்கள் எளியனவற்றை செய்யலாம்.

இதயத்துடிப்பு அதிகரித்தல், அடி வயிற்றில் வலி, மூச்சு விடுதலில் சிரமம் ஏற்பட்டால் உடனே பயிற்சியை நிறுத்தி விட்டு மருத்துவரை அணுகுங்கள்.


Weight gain during pregnancy is very common there is weight gain in breast tissue, placenta, amniotic fluid present inside, extra uterine tissues, etc. However, consume healthy foods to feed yourself and baby inside. To control extreme weight gain during pregnancy, follow a proper dieting schedule periodically. In addition, do mild physical workout and yoga as well to have a healthy pregnancy.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.