கர்ப்பத்தில் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

திருமண வாழ்வின் அடுத்த கட்ட நகர்வுக்கு அடித்தளம் இடுவது குழந்தைப்பேறு தான். ஆயிரம் கனவுகளுடன் குழந்தையை சுமக்கும் தாய், தன் குழந்தைக்காக தான் எத்தனை தியாகம் செய்கிறாள்.

உண்ணும் உணவிலிருந்து ஆரம்பிக்கும் மாற்றங்கள், குழந்தையை பிரசவித்த பின்னரும் அவள் தியாகங்களுக்கு அளவில்லை.

சத்துள்ள உணவு

கர்ப்பிணி பெண் குமட்டல், வாந்தி என்று அவதிப்பட்டாலும் கூட எக்காரணம் கொண்டும் உணவில் அசட்டையாக இருக்கக் கூடாது. முதல் மூன்று மாதங்களில் தான் குழந்தையின் உள்ளுறுப்புகள் உருவாகிறது. தாயிடம் இருந்து பெறப்படும் புரதம், கொழுப்பு, விட்டமின்கள், தாதுக்கள் கொண்டு தான் தன்னை சிருஷ்டித்து கொள்கிறது அந்த இளம் உயிர்.

முருங்கைக்கீரை, முட்டை, மீன், ஈரல், இறைச்சி, முளை கட்டிய தானியங்கள், பால் பொருட்கள், பழங்கள், உலர் பழங்கள் கலந்த சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதயத்தில் பிறவியிலேயே ஓட்டை, பிறவியிலேயே பார்வை கோளாறு, மூளை வளர்ச்சி குறைவு என்று வாயில் நுழையாத பெயர் கொண்ட வியாதிகளுடன் குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவம் பார்க்க அலைவதை விட எளிது தான், தாய் தன் குழந்தைக்காக சத்துக்கள் நிறைந்த உணவை உண்பது, வாந்தி வரும் என்றால் உணவை ஆறு பிரிவுகளாகப் பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக உண்ணவேண்டும்.

  • நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • எதற்கெடுத்தாலும் மாத்திரைகளை எடுக்காமல், பக்கவிளைவுகள் இல்லாத கைமருந்துகள் உதாரணமாக தலைவலி, சளி, இருமல் என்றால் சுக்கு காபி, கஷாயம் தயாரித்து குடியுங்கள்.
  • மலச்சிக்கல் வராமல் இருக்க நார்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கர்ப்பிணிகள் உண்ணக்கூடாதவை

  • கோலா போன்ற செயற்கை பானங்கள், டின்களில் அடைக்கப்பட்ட பிரிசர்வேடிவ் சேர்த்த உணவுகளை தவிர்க்கவும்.
  • அரிதாக சிலருக்கு மது, புகை, புகையிலை பழக்கம் இருந்தால் தவிர்ப்பது மிகவும் நல்லது.
  • நீரிழிவு, இரத்த அழுத்தம் என்று கர்ப்பகாலத்தில் இருந்தால், மருத்துவர்கள் பரிந்துரைப்படி உணவு உண்ணவேண்டும்.
  • வளமான மண்ணில் தான் விதை நன்கு முளைத்து செழிப்பாக வளரும். ஆரோக்கியமான தாயால் தான் நல்ல உடல், மன வளர்ச்சி உள்ள சந்ததிகளை உருவாக்க முடியும்.

The first few months of pregnancy is very crucial and need proper pregnancy care. Follow a healthy food habit so as to feed yourself along with your baby. If required, pregnant woman must take doctor’s advice to have a normal delivery. Make sure what a pregnant women has to eat and what not. It is necessary to avoid any alcohol consumption or smoking.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.