கர்ப்பிணி பெண்களுக்கு சரும பராமரிப்பு!

கர்ப்ப காலத்தின் போது ஒரு பெண்ணின் உடல் முழுவதும் வயிற்றில் வளரும் சிசுவிற்காக மாறுதல்களுக்கு உள்ளாகிறது. ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது.

கர்ப்ப காலத்தில் தோலில் ஏற்படும் மினுமினுப்பு

அதிர்ஷ்டவசமாக கர்ப்பகாலத்தில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் பொலிவுடன் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. பெரும்பாலும் மூன்று மாதங்களுக்கு பிறகு அதாவது இரண்டாவது டிரைமெஸ்டரில் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிப்பதால் சருமம் பளபளப்பாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவி ஊறவிடவும். எல்லாவிதமான சரும வகைகளுக்கும் இந்த கலவை பொலிவைத்தரும்.

கருப்பு திட்டுக்கள்

கர்ப்ப காலத்தில் தோலில் கறுப்பு திட்டுக்கள் தோன்றும்.சிலருக்கு கன்னத்தில், நெற்றியில், கீழ்த்தாடையில் தோன்றும். ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரோன் (estrogen, progesterone and the melanocyte-stimulating hormone (MSH)) ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கும் போது சருமத்தில் கறுப்பு திட்டுக்கள் தோன்றுகிறது.

வெயிலில் அதிகம் நடமாடாமல் இருக்கலாம். uv கதிர்களால் தோல் பாதிக்கும். தேவைப்பட்டால் கர்ப்பிணிகள் உபயோகிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்ட ஸன்ஸ்கீரின் ஆயின்மெண்ட் பயன்படுத்தலாம்.

போலிக் அமிலம் அதிகம் உள்ள பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் சேர்த்து கொள்ளும் போது சருமத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதால் சருமம் பொலிவோடு இருக்கும்.

வயிற்றில் வரிகள் (stretch marks on the stomach)

குழந்தை வளரும் போது, வயிறு பெரிதாகிறது. தோல் விரிவடைவதால் தோன்றும் வரிகள் அப்படியே நிலைத்து விடுவதும் உண்டு. இதனைத் தடுக்க கர்ப்பக் காலத்தில் விட்டமின் ஈ எண்ணெய் வாங்கி வயிற்றில் தடவவும்.

வயிற்றில் அரிப்பு

வயிற்றில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது மிதமான அரிப்பு ஏற்படும். இதற்கு நிவாரணமாக சோற்றுக் கற்றாழை ஜெல் தடவி வரும் போது அரிப்பு குணமாகும்.

எந்த ஒரு சிறு மாற்றத்தையும் உன்னிப்பாக கவனித்து வரவேண்டும். ஏதேனும் வித்யாசமாக தோன்றினால் மருத்துவரை அணுகுங்கள். தோலின் பராமரிப்புக்கு என்று எந்த ஒரு மாத்திரை, மருந்துகளையும் உட்கொள்ளாதீர்கள்.


During pregnancy, oral retinoids can cause major birth defects. You can use cocoa butter, shea butter for stretch marks, black marks and to get rid of itching in stomach. Natural skin care is safe during pregnancy for both mother and baby.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.