கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற இனிப்பு சிமிலி உருண்டை!

விளக்குக்கும், சிமிலிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. சிமிலி நமது பாரம்பரிய இனிப்பு உருண்டை. வீட்டில் விளைந்த கேழ்வரகு, எள், நிலக்கடலை கொண்டு எளிதாக செய்த ரெசிபி இது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான இரும்புச் சத்து மற்றும் கால்சியம் எளிதில் கிடைக்கக்கூடிய இனிப்பு என்பதே இதன் சிறப்பு.

தேவையான பொருட்கள்

 • கேழ்வரகு மாவு – 1 கப்
 • வறுத்த வேர்க்கடலை – 1 கப்
 • வறுத்த எள் – ஒரு கைப்பிடி
 • வெல்லம்  – 11/2 கப் ( ருசிக்கேற்ப)
 • உப்பு – சிட்டிகை
 • நெய் அல்லது நல்லெண்ணெய் 

செய்முறை

 • கேழ்வரகு மாவில் உப்பு சேர்த்து வெந்நீர் விட்டு, அடை மாவு போல் இறுகப் பிசையவும். 
 • சிறிது எண்ணெய் விட்டு, அடைகளாக தட்டி தோசைக்கல்லில் நன்கு வேக விடவும். 
 • வறுத்த வேர்க்கடலை, எள் மற்றும் பொடி செய்த வெல்லம் இரண்டையும் ஒரு சுற்று மிக்ஸியில் அரைக்கவும்.
 • இதனுடன் வெந்த கேழ்வரகு அடையை துண்டுகளாக்கி  மிக்ஸியில் இரண்டு அல்லது மூன்று சுற்றுகள் சுற்றி எடுக்கவும்.
 • பிறகு அதனை உருண்டைகளாகப் பிடிக்கவும். அளவாக செய்து அவ்வப்போது உண்பது தான் நல்லது.

பயன்கள்

 • கேழ்வரகில் உள்ள புரதம், கால்சியம் மற்றும் இரும்புச் சத்து எலும்புகளுக்கு வலு சேர்க்கும். கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு அவசியம் தேவைப்படும் சத்துக்கள் நிறைந்து உள்ளது.
 • வெல்லத்தில் உள்ள இரும்புச் சத்தும், வேர்க்கடலையில் புரதச்சத்தும் கர்ப்பக்காலத்தில் மட்டும் அல்லாமல் அனைத்து வயது பெண்களுக்கும் ஏற்றது. குறிப்பாக பருவமெய்திய பெண்களுக்கு இதனை கிராமங்களில் தவறாமல் செய்து கொடுப்பார்கள். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும் போது இதனை தொடர்ந்து உண்டு வருவது நல்ல பலன் தரும்.

குறிப்பு

கர்ப்பக்காலத்தில் எள் உண்பதற்கு தயங்கும் பெண்கள் எள்ளை தவிர்க்கவும்.


Ragi simili is a good source of calcium and an excellent source of iron. Those suffering from anemia and low hemoglobin levels can take 2-3 ragi simili balls everyday as it might help improve the condition. It also helps to boost lactation. It facilitates digestion, improves skin and hair health, reduces hypertension, reduces inflammation, prevents cancer and bone diseases, controls diabetes, improves oral health, and improves metabolism.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.