கர்ப்பப்பைக்கு வலிமை தரும் வாழைப்பூ அடை எப்படி செய்வது என்று பார்ப்போம்!

துவர்ப்பு சுவை மிகுந்த வாழைப் பூவை சுத்தம் செய்ய சோம்பல் பட்டு சமைக்காத வர்கள் உண்டு‌. நகர்ப்புறங்களில் வாழைப் பூ, தண்டு எல்லாம் கிடைப்பது என்பது அரிது. கிடைக்கும் போது நார்ச்சத்து நிறைந்த, சிறுநீரக கோளாறுகள், கர்பப்பை கோளாறுகளை நீக்கும் வாழைப்பூவை சேர்த்து கொள்ளவும்.

வாழைப் பூ அடை

தேவையான பொருட்கள்

 • வெங்காயம் – 2
 • கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு
 • கறிவேப்பிலை – ஒரு இணுக்கு
 • தேங்காய் – ஒரு கப் துருவல்

அரைக்க

 • வாழைப்பூ – ஒன்று (சிறியது)
 • புழுங்கல் அரிசி – 1/2 கிலோ
 • கடலைப்பருப்பு – 100 கிராம்
 • துவரம்பருப்பு – 100 கிராம்
 • காய்ந்த மிளகாய் – 5
 • சோம்பு – 1 டேபிள்ஸ்பூன்
 • மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
 • உப்பு – தேவையான அளவு

செய்முறை

 • வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை  பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • புழுங்கல் அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு மூன்றையும் மூன்று மணி நேரம் ஒன்றாக ஊறவைக்கவும்.
 • வாழைப்பூவை நரம்பு நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். 
 • இனி ஊற வைத்த அரிசி, பருப்புக் கலவையை கிரைண்டரில் அடை மாவு பக்குவத்தில் சேர்க்கவும்.
 • இத்துடன் வாழைப்பூ மற்றும் சோம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
 • போதுமான அளவு தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
 • அரைத்த மாவுடன் பெரிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய் சேர்த்துக் கலக்கவும். 
 • அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும், மாவெடுத்து ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.
 • சுடச்சுட அடை செய்து இதற்கு தேங்காய் சட்னி மற்றும் நெய் ஊற்றி பரிமாறவும்.

Banana has been stated in Ayurveda, the ancient Indian medicinal text, that the banana stem juice is good for passing or dissolving kidney stones. However, now there is scientific evidence in its favor. The banana stem juice has diuretic properties and reduces the size of the kidney stones. As banana stem juice is low in calories, you can take plenty of it without consuming excess calories. The recommended daily amount of fiber is 25 grams, but if you consume 20 to 40 grams of fiber a day, you will be able to lose weight more easily.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.