நாம் தினசரி பல-பல சம்பவங்களை நேரில் பார்க்கிறோம், காதால் கேட்கிறோம். நாம் கேட்பதும், பார்ப்பதும் நம்பும்படியாக இருந்தாலும், இதையெல்லாம் நாம் அப்படியே நம்பிவிடலாமா?
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் – தீர விசாரிப்பதேய மெய் என்று ஒரு கூற்று உண்டு. இப்படி, நாம் பார்ப்பதையெல்லாம் தீர விசாரிக்காமல் நம்புவதால் தான் பல உறவுகள் நசுங்கி விடுகின்றன. சில உறவுகள் நம் வாழ்க்கையில் இருந்து காணாமல் போய்விடுகின்றன.
இப்படி, நம் வாழ்க்கை பயணத்தில் நடக்கும் சம்பவங்களை நாம் நேரடியாக நம்புவதை தவிர்த்து, பொறுமையுடன் செயல்பட்டால் பல உண்மைகள் வெளிவரும். இதனால், நம் உறவுகள் காப்பாற்றப்படும்.
உதாரணத்திற்கு, இந்த சம்பவத்தை நீங்களே கேட்டு பாருங்கள். எடுத்தவுடன், இந்த சம்பவம் சரி என்றுதான் தோன்றும், பின்னர், சரியாக புரிந்துகொண்டால் நாம் புரிந்துகொண்ட விதம் தவறு என்று தெரியவரும்.
மேலே உள்ள வீடியோவில் இருப்பது போல், நாமும் பல விஷயங்களை தவறாக புரிந்து கொண்டிருக்கலாம். அவற்றை எல்லாம் உணர்ந்து, மீண்டும் வாழ்வின் அர்த்தங்களை புதுப்பித்துக் கொண்டால், வாழக்கை சுகமானதாக அமையும்.