தினமும் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள்!!!

Yoga என்பது பல கோணங்களில் உடலை சுருக்கி செய்யும் பயிற்சி. இதன் மூலம் மனதையும் உடலையும் இணைத்து ஆரோக்கியத்தை பெற முடியும். யோகாவின் சக்தியை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. இதை அனுபவித்தால் தான் அதன் நன்மைகளை உணர முடியும்.

இரத்த அழுத்தத்தை சீராக்குதல், மன அழுத்தத்தை குறைத்தல், கொழுப்புத் தன்மையை நீக்குதல் போன்றவைகளை யோகா செய்கின்றது. உடல் எடையை குறைப்பதுடன், இந்த யோகா அழகான உடல் அமைப்பை பெறவும் உதவுகின்றது. இவை அனைத்தையும் விட யோகா மன அமைதியை முழுமையாக கொடுக்கின்றது. இதை தொடர்ச்சியாக செய்வதன் மூலம் மன அழுத்தத்தை போக்கலாம். இப்போது யோகாவை தினமும் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

மன அமைதி :

யோகா சுவாசக் கோளாறை சரிசெய்து, மூளையையும், உடல் ஆரோக்கியத்தையும் பலப்படுத்துகின்றது. அதிலும் அன்றாடம் சிக்கலுக்குக் உள்ளாக்கப்படும் மூளையின் உட்பிரிவு சம்பந்தமான பிரச்சினைகளை சரிசெய்கின்றது. யோசிக்கும் திறனுக்கும், உருவாக்கும் திறனுக்கும் உள்ள சமநிலையை உருவாக்கும் தன்மை யோகாவிற்கு உள்ளது.

சமநிலை :

வயதான காலத்தில் உடல் தளர்வடைந்து கீழே விழ நேரிடும். அதற்கு யோகா மிக அவசியம். கீழே விழுதல், முதுகு வலி, மூடூ வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் யோகா நிவாரணம் அளிக்கின்றது. இதனால் உடல் வலிமை அடைவதுடன், மூளையும் சீராக செயல்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.