தேர்வில் வெற்றியும், அதிக மதிப்பெண்கள் பெற மந்திரங்கள்!

தேர்வு சமயங்களில் குழந்தைகளுக்கு மனோ தைரியம் அளிப்பது தெய்வ நம்பிக்கை தான். கடவுள் நம்பிக்கை, பக்தி என்பதற்கு அப்பாற்பட்டு ஸ்லோகங்களை திரும்ப திரும்ப சொல்வது ஒரு மனனப்பயிற்சி தான். சமயங்கள் போதிக்கும் நன்னெறிகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் வாழ்வியலை நெறிப்படுத்தத்தான் என்ற தெளிவு இருந்தால் போதும்.

விளையாட்டாக வீட்டில் பெரியவர்கள் இருந்தால் சொல்வார்கள், சரஸ்வதியை கெட்டியாக கைப்பிடித்து கொண்டால், லட்சுமி தானா தேடிவருவாள் என்பார்கள். அதன் உட்பொருள் என்னவென்றால் கல்வி தரும் அறிவு செல்வம் தேட துணை வரும் என்பது தான்.

ஸ்ரீ சரஸ்வதி மந்திரம்

இம்மந்திரத்தை அதிகாலையிலும் படிக்கும் முன்னும் ஜெபித்து வர கல்வியில் நல்ல முன்னேற்றமும் அதிகமான மதிப்பெண்களும் கிட்டும். வெள்ளைத்துணி விரித்துக் கிழக்கு நோக்கி அமர்ந்து ஜெபிக்கவும்.

எப்பொழுதும் குழந்தைகள் படிக்கும் பொழுது கிழக்கு அல்லது வடகிழக்குத் திசை நோக்கி அமர்ந்து படிப்பது நல்லது. இது படிப்பில் விருப்பம் உண்டாகச் செய்யும் மேலும் ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

ஸ்ரீ வாக்வாதினி மந்திரம்

ஓம் நமோ பகவதி சரஸ்வதி வாக்வாதினி !

பிரம்மரூபிணி புத்திபத்தினி !

மம வித்யாம் தேஹி தேஹி ஸ்வாஹா !!

மந்திரத்தால் மாங்காய் பறிக்க முடியாது என்ற கூற்றுக்கு ஏற்ப கடின உழைப்பும் கடவுள் ஆசிர்வாதம் தான் தேர்வுகளை வெற்றி பெற வைக்கும்.


A mantra is usually any repeated word or phrase, but it can also refer more specifically to a word repeated in meditation. Mantra comes from a Sanskrit word meaning a “sacred message or text, charm, spell, counsel.” Another great benefit of the Gayatri mantra is that, you can develop your concentration and memory power to a great extent. The vibration which is created by the chanting of this mantra is directly working on the three chakras of your body, and therefore it is helping your brain, eyes, sinuses and lower head. Now start chanting the mantra ‘Om’ silently inside. There is no need to say the mantra aloud. Chant without moving your lips or tongue. Let each repetition bring you back to your self.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.