கூகுள் பிக்சல் 4a இன்று வெளியீடு, விலைகள் பற்றிய புதிய விவரங்கள்:

பிக்சல் 4a என்பது சமீபத்திய காலங்களில் கூகுள் தயாரிக்கும் மலிவு தொலைபேசி ஆகும். சமீப காலங்களில் பிக்சல் 4a பற்றி பல்வேறு வதந்திகள் அதிகம் பரவி வருகின்றன. கூகுள் நிறுவனம் 2019 மே மாதத்தில் நடைபெற்ற டெவலப்பர் மாநாட்டில் பிக்சல் 3a தொடரைக் கொண்டு வந்தது. எனவே, இந்த தொலைபேசி மே மாதம் கூகுள் I / O நிகழ்விலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூகுள் இந்த ஆண்டு நடைபெற இருந்த I / O டெவலப்பர் மாநாட்டை COVID-19 தொற்றுநோய் காரணமாக ரத்து செய்தது, இதனால் அதன் புதிய பிக்சல் தொலைபேசியை அறிமுகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

கடந்த ஆண்டின் பிக்சல் 3a வின் தொடர்ச்சியான பிக்சல் 4a வை கூகுள் இன்று நிச்சயமாக வெளியிடும். கூகுள் நிறுவனம் இதுவரை அறிமுகப்படுத்தவில்லை என்றாலும், பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன் குறித்து ஏற்கனவே நிறைய வதந்திகளைப் பார்த்தோம்.

பிக்சல் 4a வின் வெளியீட்டு நேரம் குறித்து கூகுள் எந்த விவரங்களையும் வழங்கவில்லை. இருப்பினும், பிக்சல் 4a இன்று அறிமுகமாகும் என்பதை கடந்த வாரம் உறுதிப்படுத்தியது. வெளியீட்டு அறிவிப்பு அமெரிக்காவின் காலை நேரத்தில் நடைபெறலாம் அதனால் இது இந்தியா நேரப்படி மாலை வெளியிடபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்சல் 4a இல் அற்புதமான மூன்று வகைகள்:

கூகுள் பிக்சல் 4a தொடரில் மூன்று மாடல்களை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது என்ற வதந்தி பரவியுள்ளது. முதல் மாடலில் 4G இருக்கலாம், மற்ற இரண்டில் 5G இருக்கலாம். மூன்று மாடல்களிலும் 5.8 இன்ச் OLED ஸ்க்ரீன் மற்றும் மேம்பட்ட பின்புற கேமரா இருப்பதாக கூறப்படுகிறது. 5G கொண்ட பிக்சல் 4a பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்புடன் வரும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், 4G மாடலின் பின்புறத்தில் ஒரே ஒரு கேமரா மட்டுமே இடம்பெறும்.

எதிர்பார்க்கப்படும் பிக்சல் 4a-வின் அம்சங்கள்:

ஆண்ட்ராய்டு உரிமையாளரால் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் போன் என்பதால், கூகுள் பிக்சல் 4a வில் ஆண்ட்ராய்டு 10 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போனில் 5.8 inch Full HD+ (1080 x 2340 பிக்சல்கள்) Display மற்றும் Hole-punch வடிவமைப்பும் இருப்பதாக வதந்தி பரவியுள்ளது. அட்ரினோ 618 GPU மற்றும் 6GB RAM உடன் ஜோடியாக Octa core Qualcomm Snapdragon 730G SoC இருப்பதாக யூகிக்கிக்கப்படுகிறது. பிக்சல் 4a 64 GB மற்றும் 128 GB ஸ்டோரேஜ் வகைகளைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

கூகுள் பிக்சல் 4a பின்புறத்தில் ஒற்றை 12.2 மெகாபிக்சல் கேமரா சென்சார் கொண்டுள்ளது, இது பிக்சல் 4 இன் வீடியோ ரெகார்டிங் திறனைக் கொண்டுள்ளது. கூகுள் பிக்சல் 4a-வில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இதில் 3.5mm headphone jack மற்றும் USB Type-C  போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 3,080 mAh பேட்டரியையும் எதிர்பார்க்கலாம்.

லோ எண்ட் பிக்சல் 4a-வில் Snapdragon 730G processor மற்றும் 6GB RAM மற்றும் 128 GB Storage இருக்கும். பிக்சல் 4a தொலைபேசியின் பின்புறத்தில் சதுர வடிவு Camera bump, வலதுபுறத்தில் Power பட்டன் மற்றும் volume பட்டன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பிக்சல் 4a வின் விலைகள் பற்றிய தகவல்கள்:

கூகுள் பிக்சல் 4a 64 GB ஸ்டோரேஜிற்கு 299$ (தோராயமாக ரூ. 22,400) மற்றும் 128 GB ஸ்டோரேஜிற்கு 349$ (தோராயமாக ரூ. 26,100) என நிர்ணயிக்கப்படலாம் என்று சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் இந்த தொலைபேசி வர வாய்ப்புள்ளது. இருப்பினும், அதன் இந்தியாவின் விலை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. நினைவுகூர, கூகுள் பிக்சல் 3a மற்றும் பிக்சல் 3a XL ஆகியவை 2019 மே மாதத்தில் ரூ.39,999 விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்டன.

லோ எண்ட் பிக்சல் 3a கடந்த ஆண்டு அறிமுகமானபோது மிகவும் நன்றாக இருந்தது. பிக்சல் 4a-வில், சிறந்த கேமரா மற்றும் ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவத்துடன் ஒரு ஸ்மார்ட்போனை உருவாக்க கூகுள் அதே சூத்திரத்தைப் பயன்படுத்தலாம். இருப்பினும், இந்த முறை, போட்டிகளின் காரணமாக இன்னும் குறைந்த விலையில் தொலைபேசியை அறிமுகப்படுத்த கூகுள் நிறுவனத்திற்கு அழுத்தம் உள்ளது. ஐபோன் SE (2020) 399$-ல் இருந்து விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பிக்சல் 4a க்கு 50$ குறைவாக வசூலிப்பதன் மூலம், ஐபோன் SE மற்றும் OnePlus Nord-ல் தங்கள் பணத்தை செலவழிக்க விரும்பாத பட்ஜெட் உணர்வுள்ள வாடிக்கையாளர்களை Google Pixel 4a ஈர்க்கக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

இந்த தகவல், மற்றவர்களுக்கும் பயன்படும். நல்லதை பகிர்வோம்.